தாம்பூலத்தில் வைக்கப்படும் வெற்றிலை... மருத்துவ குணங்கள் என்னென்ன?.!
தாம்பூலத்தில் வைக்கப்படும் வெற்றிலை... மருத்துவ குணங்கள் என்னென்ன?.!
வெற்றிலையின் பயன்பாடு மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இருந்து வருகிறது. பல்லாயிரம் வருடமாக மனிதரால் பயன்படுத்தப்பட்டு வரும் தாவரத்தில் வெற்றிலையும் ஒன்றாகும். வெற்றிலை பயன்பாடு குறித்து கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாகவே இலங்கையில் மகா வம்சம் என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள கால்சியம், இரும்புசத்து உடலுக்கு நன்மையை அளிக்கிறது.
மேலும், செயற்திறன் மிக வேதிப்பொருளான கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், ஆக்ஸாலிக் அமிலம் போன்றவையும் உள்ளன. வெற்றிலை எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. வெற்றிலைச்சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வெற்றிலையின் வேர் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனையை சரிசெய்கிறது. சொறி சிரங்கு சரியாக அரை டம்ப்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க வைத்து தடவினால் சொறி, சிரங்கு, படை பிரச்சனை சரியாகும்.
தலைவலி சரியாக வெற்றிலையை கசக்கி சாறுஎடுத்து, சிறிதளவு கற்பூரத்தினை சேர்த்து குழப்பி தடவினால் தலைவலி பிரச்சனை சரியாகும். தேள் விஷம் முறிவதற்கு இரண்டு வெற்றிலையில் 9 மிளகை சேர்த்து தேங்காய் துண்டுடன் மென்று முழுங்க, தேள் விஷம் உடனடியாக முறியும்.
இரண்டு வெற்றிலையோடு வேப்பிலை, அருகம்புல்லை 500 மிலி தண்ணீரில் கொதிக்கவிட்டு, தண்ணீர் 150 மில்லியாக வந்ததும் ஆறவைத்து மூன்று வேலை உணவுக்கு முன்னர் குடித்து வந்தால் சர்க்கரை வியாதி பிரச்சனை சரியாகும். அல்சர் பிரச்சனை சரியாக இரண்டு வெற்றிலையுடன் கைப்பிடி வேப்பிலை, அத்தி இலை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.
நமது உடலில் சுரக்கும் 24 வகையான அமினோ அமிலம் வெற்றிலையில் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவி செய்கிறது. இதனால் வெற்றிலை சாப்பிட்டால் ஜீரணம் எளிதாகும். இதனாலேயே முன்னோர்கள் உணவுக்கு பின்னர் தாம்பூலம் தரிக்கும் வழக்கத்தை வைத்திருந்தனர். தாம்பூலத்தில் வைக்கப்படும் வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்புக்கு நோய்தடுப்பு ஆற்றல் உள்ளன.