பெண்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் கருத்தடை மாத்திரைகள்.... புற்றுநோய் அபாயமாம்... ஆய்வில் பகீர் எச்சரிக்கை.!
பெண்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் கருத்தடை மாத்திரைகள்.... புற்றுநோய் அபாயமாம்... ஆய்வில் பகீர் எச்சரிக்கை.!
கருத்தடைக்கு இன்றளவில் பல மருந்துகள், கருத்தடை சாதனங்கள் போன்றவை சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் விளைவுகள் தான் பதறவைக்கும் வகையில் இருக்கின்றன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் கருத்தடை மாத்திரைகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.
இந்த ஆய்வின் முடிவுகளின் படி கருத்தடை மாத்திரைகளை உபயோகம் செய்யும் பெண்களுக்கு புற்றுநோய் அபாயம் அதிகரித்துள்ளதாக முடிவுகள் தெரிவித்துள்ளன.
உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்கள் கொண்ட மாத்திரைகள் புற்றுநோயின் அபாயத்தை 20 மடங்கு முதல் 30 மடங்கு அதிகரிக்கின்றன.
இதனால் கருத்தடை மாத்திரைகள் கட்டாயம் பயன்படுதியாக வேண்டும் என்ற நிலையில் உள்ள பெண்கள் கட்டாயம் அதுசார்ந்த பிரச்சனையால் அவதிப்பட நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.