தினமும் ஒரு அவித்த முட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?..!
தினமும் ஒரு அவித்த முட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?..!
அன்றாட வாழ்வில் நாம் முட்டையை பெரும்பாலும் ஆம்ப்லேட் வடிவில் விரும்பி சாப்பிடுவது உண்டு. சிலருக்கு அவித்த முட்டை என்றால் கொள்ளை பிரியம் இருக்கும். அந்த வகையில், அவித்த முட்டை சாப்பிட்டால் ஏற்படும் நன்மை குறித்து இன்று காணலாம்.
முட்டையில் உள்ள லூடின், லீக்சைக்தைன் ஆகியவை கரோட்டினாய்டை அதிகளவு கொண்டுள்ளது. இதனால் கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்கள் தடுக்கப்படுகிறது. கண்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம், இதய நரம்பு மண்டல பிரச்சனையை குறைத்து, மூளையின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.
புரோட்டின் மற்றும் பிற சத்துக்கள், குறைந்தளவு கலோரி போன்றவற்றால் உடலுக்கு நன்மை கிடைக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, உடலின் எடை கட்டுப்பாடுடன் இருக்கும். மூளையும் ஆரோக்யத்துடனே இருக்கும், ஆற்றலும் அதிகரிக்கும். புற்றுநோய்க்கான ஆபத்தும் குறையும்.