வஜ்ரவல்லி என்னும் பிரண்டை: 300 வகையான நோய்களுக்கு மருந்தாக இது பயன்படும் என்று மாமுனி அகத்தியரே சொல்லியிருக்காரு பாருங்க..!
வஜ்ரவல்லி என்னும் பிரண்டை: 300 வகையான நோய்களுக்கு மருந்தாக இது பயன்படும் என்று மாமுனி அகத்தியரே சொல்லியிருக்காரு பாருங்க..!
‘பெத்த வயித்துல பிரண்டையை கட்டு’ என்கிற சொல்வழக்கு, இன்று வரை கிராமங்களில் பரவலாக உள்ளது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், வைட்டமின்-சி, அமிரோன், அமைரின், சிட்டோசிரால், கரோட்டின், குவாட்ராங்குலாரின்-ஏ, குவர்சிடின் போன்ற சத்துக்கள் பிரண்டையில் உள்ளன. இதனால் அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும் தன்மை பிரண்டைக்கு உண்டு.
மருத்துவ குணங்களை ஏராளமாக கொண்ட அரிய வகை தாவரமான பிரண்டை கிராமப்புறங்களிலும், மலைப்பகுதியிலும் ஏறு கொடி தாவரமாக வளர்ந்து காணப்படும். இப்பொழுதும் கிராமங்களில் பலரது வீடுகளின் முன்பாக இருக்கும் வேலிகளில் பிரண்டை படர்ந்திருப்பதை காணலாம்.
இரைப்பையில் ஏற்படும் அலர்ஜி, அஜீரணம், பசியின்மை, குடற்புழு உள்ளிட்ட பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு பிரண்டையின் தண்டு சிறந்த மருந்தாக உள்ளது. சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பிரண்டை சேர்க்கப்படுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் இடுப்பு வலி, வயிற்று வலி நீங்குவதற்கு பிரண்டை சிறந்த மருந்தாக பயன்படும். இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, வெந்நீரில் கலந்து பருகி வருவது நல்ல பலனை கொடுக்கும்.
பிரண்டை தண்டை நெய்யில் இட்டு வதக்கி உண்டு வந்தால், மூல நோயினால் ஏற்படும் ரத்தக்கசிவும், தினவும், எரிச்சலும் நீங்கும் என்று இந்த உலகத்தில் அவதியுறுவோருக்கு சொல் என்று அகத்திய மாமுனிவர் தனது குணவாடகப் பாடலில் கூறியுள்ளார்.
பெரும்பாலும் இதனை துவையல் செய்து உண்பார்கள். மிகவும் அரிதாக இதனை பொடி செய்து அதனை தினசரி உணவுடன் கலந்து உண்பவர்களும் உள்ளனர். நமது உடலை வஜ்ரம் போல பாதுகாக்கும் பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற ஒரு பெயரும் உள்ளது.