மோர் குடிப்பதால் இவ்வளவு பக்க விளைவுகள் ஏற்படுமா.? மருத்துவர்கள் அறிவுரை.!
மோர் குடிப்பதால் இவ்வளவு பக்க விளைவுகள் ஏற்படுமா.? மருத்துவர்கள் அறிவுரை.!
கோடை காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் பானங்களில் ஒன்று மோர். பெரும்பாலானவர்கள் செயற்கை குளிர்பானங்களுக்கு பதிலாக கோடை சூட்டை தணிப்பதற்கு ஊர் அருந்துவார்கள். மோர் நமது உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது.
மோரில் புரதச்சத்து நார்ச்சத்து வைட்டமின் பி12 சோடியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இது கோடை காலத்தில் நமது உடலில் ஏற்படும் ஆற்றல் இழப்பை சரி செய்வதோடு பற்கள் மற்றும் எலும்புகளுக்கு தேவையான வலிமையையும் வழங்குகிறது. இத்தனை நன்மைகள் மோரில் இருந்தாலும் இவை நம் உடலுக்கு பக்க விளைவுகளை சில நேரங்கள் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.