×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகள் என்னென்ன?.. எதனால் ஏற்படுகிறது?.. அதனை சுத்தப்படுத்த என்ன செய்யலாம்?..!

கல்லீரலை பாதிப்புக்கான அறிகுறிகள் என்னென்ன?.. எதனால் ஏற்படுகிறது?.. அதனை சுத்தப்படுத்த என்ன செய்யலாம்?..!

Advertisement

 

நமது இதயத்தை பாதுகாக்க நாம் வழங்கும் முக்கியத்துவத்தினை கல்லீரலுக்கு கொடுப்பது இல்லை. இதயம் வேலை செய்யாவிடில் உடல் இயக்கம் இருக்காது என்று பயம்கொள்ளும் நாம், அதனைப்போலவே முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஈரலை கவனிக்காமல் சாதரணமாக விட்டுவிடுகிறோம். 

இதயம் சுருங்கி, விரிந்து நம்மை பாதுகாக்கிறது என்றால், ஈரல் வேதியியல் தொழிற்சாலையை போல செயல்படுகிறது. ஈரல் அதன் வேலையை நிறுத்திவிடும்பட்சத்தில், இருசக்கர வாகனத்தில் இருந்து வரும் கரிய புகையே நமது உயிரை எடுக்க போதுமான ஒன்று ஆகும். நமது உடல் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணியாக இருப்பது ஈரல். 

உணர்வு சம்பந்தப்பட்டது: கிராமங்களில் இன்றளவிலும் அதிர்ச்சியான தருணங்களை ஈரக்குலையே நடுங்கிவிட்டது என்று கூறுவார்கள். அவற்றின் அர்த்தம் ஈரல் உணர்வோடு சம்பந்தம் கொண்டது.  காரணமே இல்லாத கவலை ஈரல் குறைபாட்டின் அறிகுறி ஆகும். நமது உடலில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். அலோபதி மருந்துகள் கல்லீரலுக்கு பெரும் தீங்காக அமைகிறது. அதனை அளவோடு எடுக்கவே யோசிக்க வேண்டும்.

காரணங்கள்: அதேபோல ஆல்கஹால் அதிகளவு குடிப்பது, கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது போன்றவற்றாலும் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. பசித்த பின்னர் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருத்தலும் கல்லீரலில் கொழுப்புகளை சேர்க்க வழிவகை செய்யும். நமது கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை சில அறிகுறிகளில் காணலாம். 

வாயில் துர்நாற்றம்: கல்லீரல் தனது இயக்கத்தை சரிவர செய்யவில்லை என்றால், நமது வாயில் இருந்து துர்நாற்றம் ஏற்படும். கல்லீரலின் செயல்பாடுகள் குறைவதால் உடலில் அமோனியா உற்பத்தி அதிகரிக்கும். பற்பசை விளம்பரத்தில் வாயில் துர்நாற்றம் சாதாரணம் என கூறி முட்டாள் ஆக்குகிறார்கள். அளவுக்கு அதிகமான துர்நாற்றம் கவனிக்க வேண்டியவை ஆகும்.
.
கருவளையம்: நமது கண்களை சுற்றிலும் கருவளையம், சோர்வான கண்கள் மற்றும் பார்வை குறைபாடு உடைய கண்கள் போன்றவற்றாலும் அதனை நாம் உறுதி செய்யலாம். அதேபோல, தோல் பாதிப்பு, உடல் சோர்வு, செரிமான பிரச்சனை, எண்ணெய் பண்டங்களை சாப்பிடுவது, கொழுப்பு பொருட்களை சாப்பிடுவது, கல்லீரலில் அதிகம் கொழுப்பு தங்குவதும் கல்லீரல் பாதிப்பை உறுதி செய்யும்.

உடலில் இருக்கும் தண்ணீர் வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில், நமது மேல் வயிறு வீக்கமாகும். இவ்வாறான தொந்தரவு தெரிந்தால் மருத்துவரை நாடுவது நல்லது. கல்லீரல் பாதிப்பு சில நேரத்தில் சருமத்தின் மெலனின் நிறமிகளை பாதித்து நிறமிழக்க வைக்கும். இவ்வாறான பிரச்சனை உடலில் இருக்கும் பட்சத்தில், கல்லீரல் பழுதடைந்த அறிகுறி ஆகும்.

சிறுநீரக கழிவுகள்: நமது உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளானது அடர்ந்த கருமையான நிறத்தில் இருக்கும் பட்சத்தில், அதனை கவனிக்க வேண்டும். எப்போதாவது அரிதாக இவை தென்பட்டால் உடல் வறட்சி என அர்த்தமாகும். அதனை நீர் அல்லது பழச்சாறுகள் குடித்து சரி செய்யலாம். நாளுக்கு நாள் என தொடரும் பட்சத்தில் கல்லீரல் பழுதான அறிகுறி ஆகும்.

கண்களில் மஞ்சள் நிறம் தென்படும் பட்சத்தில், மஞ்சள் காமாலை அறிகுறியாக இருக்கும். பித்தப்பையில் இருக்கும் பித்த நீர் உடலுடன் கடந்துதான் பொருள் கண்களில் தென்படுகிறது. வாயில் தென்படும் அதிக கசப்பும் கல்லீரல் பிரச்சனையின் அறிகுறி தான்.

கல்லீரலை சுத்தம் செய்ய: உளர் திராட்சை பழங்களை காலை எழுந்ததும் அரை கப் நீரில் ஊற வைத்து, பின்னர் அதனை சூடேற்றி 24 மணிநேரம் கழித்து வெறும் வயிற்றில் அந்நீரை குடித்தால் கல்லீரல் சுத்தப்படும். அதேபோல ஊறவைத்த உலர் திராட்சைகளை சாப்பிடலாம்.

கல்லீரல் பாதிப்பு குறைய சோம்பு மருந்தாக பயன்படுத்தப்படும். சோம்பை வறுத்து பொடித்து, அதனோடு தேன் கலந்து காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளிலும் 1 ஸ்பூன் அளவில் சாப்பிட்டு வர ஈரல் பிரச்சனை சரியாகும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கல்லீரல் #உடல்நலம் #health tips #liver #Liver Damage #natural tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story