ஆப்ரேஷன் தியேட்டருல துப்புரவு பணியாளர்களா.. இந்த கொடுமையெலா எங்க நடக்குதுனு தெரியுமா?
celam medical college reports in swipper
சேலம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் சர்வ சாதாரணமாக ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளிலோ அல்லது தரமான சுகாதாரமான அரசு மருத்துவமனைகளிலோ நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கே சில சமயங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடும் இன்றி சர்வ சாதாரணமாக ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு என சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தரமான மக்களென அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்வாறு மருத்துவமனை செயல்படும் நிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நோயானது எவ்வாறு நீங்கும் என்று கேள்வி எழுப்ப தோன்றுகிறது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கும்போது, மருத்துவமனை விதிகள் மீறப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை டீன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மருத்துவமனையின் இந்நிலைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.