அன்றாடம் 45 நிமிடம் இதை செய்யுங்க.. உங்க லைஃப் செம்ம ஜாலியா இருக்கும்.!
அன்றாடம் 45 நிமிடம் இதை செய்யுங்க.. உங்க லைஃப் செம்ம ஜாலியா இருக்கும்.!
அன்றாடம் நாம் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது மனம் மற்றும் உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும். என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராகி உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும், முதுகு நரம்புகள் உறுதியாகி நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.
நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவு பல மடங்கு அதிகரிக்கிறது. இதனால், நல்ல தூக்கம் வரும். உடலில் இருந்து கெட்ட வியர்வை வெளியேறி, விட்டமின் டி எளிதாக கிடைக்க வழிவகை செய்யும். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதால் செரிமான மண்டலம் நன்றாக இயங்கும்.
இதன் மூலம் நமது மனம் உற்சாகம் அடைவது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கை ஏற்படும். முழங்கால், முழங்கைகள், இடுப்பு உள்ளிட்டவை வயதாகும் போது மூட்டு வலியை ஏற்படுத்தும். வயதாக ஆக எலும்பு தேய்மானம் அடையும். எனவே உடல் பலவீனமடையும். இவற்றை தடுக்க வேகமாக நடைபயிற்சி செய்வது நல்லது.
இதனால் மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு ஆற்றல் கிடைத்து. அவை உறுதியாகின்றன. மேலும், அன்றாடம் 45 நிமிட நடைபயிற்சி இதயத்தை வலிமையாக்கி கண் பார்வையையும் தெளிவுப்படுத்துகிறது. ரத்த ஓட்டம் மேம்படுவதால் உடலில் ஆக்ஸிஜநேற்றம் நிகழ்ந்து மன அழுத்தத்தை குறைக்கிறது.
இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது .அன்றாடம் 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருப்பவர்கள் மனநலப் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் ஹார்மோன் இம்பேலன்ஸ் பிரச்சினைகளையும் இது சமாளிக்கும். மேலும் இது இளமையான தோற்றத்திற்கு வழிவகை செய்யும்.