அச்சச்சோ.. உங்களுக்கு அடிக்கடி மறந்துபோகுதா?.. அப்போ டிமென்ஷியா பாதிப்பாக இருக்கலாம்..! உஷாரா இருங்க..!!
அச்சச்சோ.. உங்களுக்கு அடிக்கடி மறந்துபோகுதா?.. அப்போ டிமென்ஷியா பாதிப்பாக இருக்கலாம்..! உஷாரா இருங்க..!!
நமது நினைவுகள், சிந்தனை, நடத்தை, மொழி கற்றல் திறன் போன்றவற்றை பாதிக்கும் நோய் டிமென்ஷியா (Dementia). வயதானவர்களிடையே இந்த நோய் அதிகமாக காணப்பட்டாலும், இது வயதுடன் தொடர்புடைய நோய் கிடையாது.
அன்றாட வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் பாதிப்பானது மூளையில் ஏற்பட்டு, தற்போது டிமேன்ஷியா என்ற நிலை ஏற்படும். உலக அளவில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல இது 60% முதல் 70% மக்களிடம் அல்சைமர் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இவை மூளையை பாதிக்கும் பக்கவாதம் என்று கருதப்பட்டாலும், பின் நாட்களில் அவற்றின் உண்மையை தாமதமாக அறிந்து கொள்கின்றனர்.
இதன் அறிகுறிகளாக பேசுதல், புரிதல் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விஷயத்தில் ஏற்படும் சிரமம், ஞாபகம் வருவதில் குழப்பம், தீர்வு எடுக்க இயலாத நிலை, எழுதுதல் மற்றும் படிப்பதில் ஏற்படும் சிரமம்,
நாம் பழகிய விஷயங்களை மறப்பது, நாம் அடிக்கடி சென்று வரும் வழிகளை மறப்பது, பிறருக்கு அல்லது பிறரது உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இயலாதது, மனக்கிளர்ச்சி போன்றவையும் ஆகும்.
நமது மூளையில் உள்ள சில பகுதிகளில் ஏற்படும் மாற்றத்தினால் நியூரான் நரம்பு செல்கள் இறந்துவிடும் பட்சத்தில் அதன் செயல்திறன் நிறுத்தப்பட்டு டிமென்ஷியா ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.