செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஆபத்தா?.. மக்களே தெரிஞ்சுக்கோங்க..! இனி இப்படி பண்ணாதீங்க..!!
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஆபத்தா?.. மக்களே தெரிஞ்சுக்கோங்க..! இனி இப்படி பண்ணாதீங்க..!!
இன்றளவில் செம்பு பாத்திரத்தில் பலரும் நீர் குடிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை உண்டாக்கும் என்பதை நினைத்து வருகின்றனர். ஆனால் அதிகளவு செம்பு நீரை குடித்தால் அது உடலுக்கு பாதுகாப்பாக அமையாது என்ற தகவல் தற்போது வெளியே வந்துள்ளது.
செம்பு நீரை குடிப்பது இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்க உதவி செய்யும். நரம்பு செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். எலும்புகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் போன்ற பல்வேறு நன்மைகளை உடலுக்கு அது செய்கிறது.
ஆனால் அதிகளவு செம்பு பாத்திரத்தில் நீர் குடித்தால் உடலுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. செம்பு பாத்திரம் இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது என்பதால் அதனை அடிக்கடி குடிக்கும்போது ரத்தத்தை சுத்திகரிக்கும் செயல்முறை இயல்பை விட அதிகமாகும்.
அதனால் சிறுநீரகம், கல்லீரல் போன்றவையும் பாதிக்கப்படும். செம்பு பாத்திரத்தில் இரவு 6 மணநேரம் முதல் 8 மணி நேரத்திற்கு முன்னதாக நீர் பருகுவதே சரியானதாகும். அதைப்போல நான் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் மட்டுமே பருகலாம்.
காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடலுக்கு நல்லது. அளவுக்கு அதிகமாக செம்பு பாத்திரத்தில் நீர் குடித்தால் அது உடலுக்கு மேற்கூறிய தீமைகளை ஏற்படுத்தும். எனவே உடலுக்கு நன்மை விளைவிக்கும் பொருட்டு மட்டும் நீர் அருந்த வேண்டும்.