முட்டையுடன் பெப்பர் போட்டு சாப்பிடுவது நல்லதா! கெட்டதா!
egg with pepper-good or bad thinks
நாம் உண்ணும் முட்டையில் என்ன சேர்க்கிறோமோ இல்லையோ கட்டாயமாக மிளகு சேர்த்துக் கொள்வது உலகம் முழுவதும் உள்ள ஒரு முறையாக இருக்கிறது. இவை இரண்டையும் பரிக்க முடியாத கலவை என்றே சொல்லலாம்.
இதற்கு முக்கியக் காரணம் ஒன்று சுவை, மற்றொன்று முட்டை நாற்றத்தைப் போக்குவதற்கும், மற்றொரு காரணம் சாப்பிடத் தூண்டும் உந்துதலை ஏற்படுத்துகிறது.
மிளகில் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் எதிர்பாராதவிதமாக அமைந்துள்ளன. செரிமானத்தை ஊக்குவித்தல், சருமத்தை மேம்படுத்துதல் மற்றும் புற்று நோயை எதிர்க்கும் ஒரு கூறாகவும் மிளகு இருப்பது இன்னும் ஆச்சர்யத்தை தரக்கூடியது.
மேலும் இந்த ஆரோக்கியமான உணவான மிளகுடன் 7 கிராம் புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின் மற்றும் மினரல் கொண்ட முட்டையை இணைப்பதால் ஒரு ஆரோக்கியம் பொருத்திய உணவு கிடைப்பதால் நம் உடலுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சி கிடைக்கிறது.
அதுமட்டுமின்றி முட்டை போன்ற காரமில்லாத ஒரு உணவுடன் சிறந்த கலவையாக பேப்பர் இருப்பதால் அனைவரும் இதனை விரும்புகின்றனர்.