பாதாமை அதிகம் சாப்பிட்டால் இவ்வுளவு பேராபத்தா?.. பாதாம்பருப்பு விரும்பிகள் கவனம்.!
பாதாமை அதிகம் சாப்பிட்டால் இவ்வுளவு பேராபத்தா?.. பாதாம்பருப்பு விரும்பிகள் கவனம்.!
பாதாம் பருப்பில் நார்சத்து, புரதம், வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், பாஸ்பிரஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. மனித உடலின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட, மனநிலை மேம்பட, இதயநோய் மற்றும் புற்றுநோய், நீரழிவு நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கவும் பாதாம் உதவி செய்கிறது. ஆனால், பாதாமை அதிகளவு உட்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும். குமட்டல், வயிற்று போக்கு போன்ற பிரச்சனையும் ஏற்படலாம். ளாக்டொஸ் அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் பாதாம் பாலை குடிக்காமல் தவிர்ப்பது நல்லது. பாதாமை அதிகளவு உட்கொண்டால், தைராயிடு பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு பாதாம் பால் நல்லது என்றாலும், அதில் குழந்தைகளுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பது இல்லை. அதில் சில பக்கவிளைவுகளும் உள்ளன. நாளொன்றுக்கு ஒரு கப் அல்லது 240 மிலி அளவுக்கு மேல் பாதாம் பால் பருக கூடாது. வணிக ரீதியில் தயார் செய்யப்படும் பாதாம் பாலை தவிர்ப்பது நல்லது.