நீரழிவு நோயால் அவதிபடுகிறீர்களா?; கவலையை விடுங்க: இதை மட்டும் ஒரு மண்டலம் சாப்பிடுங்க.!
நீரழிவு நோயால் அவதிபடுகிறீர்களா?; கவலையை விடுங்க: இதை மட்டும் ஒரு மண்டலம் சாப்பிடுங்க.!
வெந்தய கீரையில் புரத சத்து, கொழுப்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம், இரும்பு சத்து, சோடியம், உயிர் சத்துக்கள் மற்றும் கயோலின் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து பசியினை தூண்டும். ரத்தத்தை சுத்திகரிக்கும். சொறி, சிரங்கு வராமல் தடுக்கும். வெந்தயக் கீரையை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்.
வெந்தயக் கீரையை கடைந்து நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் மற்றும் வாய்ப்புண் ஆறும். மூலம், குடல் புண் போன்ற நோய்களுக்கு வெந்தயக் கீரை மிக சிறந்த மருந்து.
மேலும் வெந்தயக் கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். இதன் ஹைபோகிளைசெமிக் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை மேம்படுத்துவதிலும் குளுக்கோஸ் அளவை குறைக்கவும் பயன்படுகிறது.
வெந்தயக்கீரையை வெண்ணெய் சேர்த்து வதக்கி உண்டால் பித்தத்தால் ஏற்படும் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உபாதைகள் மற்றும் பசியின்மை, ஆகியவை குணமாகும். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் சூடு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும்.
இதனை குழம்பாகவும், கூட்டாகவும் சமைத்து உண்ணலாம். இதனுடன் துவரம் பருப்பை சேர்த்து மற்ற கீரைவகைகளை போன்றே உணவு வகைகளை தயாரிக்க முடியும். இது சிறந்த மூலிகையாகவும் இருப்பதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கிறது.