அடடே... வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
அடடே... வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
இளநீர் கோடை காலத்தில் அருந்துவதற்கு சிறந்த பானமாகும். இது உடலில் சூட்டை தணிப்பதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இளநீரில் கார்போஹைட்ரேட் மக்னீசியம் பொட்டாசியம் வைட்டமின் சி மற்றும் சோடியம் ஆகிய மினரல்கள் நிறைந்திருக்கின்றன . இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், செரிமான கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இளநீரில் உள்ள பன்புகள், உடலில் அமில ரிஃப்ளக்ஸ் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால், வயிற்றுப்போக்கு, அஜீரண கோளாறு அகியவை ஏற்படாமல் தவிர்க்கலாம். இளநீரில் அயர்ன் சத்துகள், கால்சியம் மற்றும் மாக்னீசிய சத்துகள் நிரம்பியிருக்கின்றன. இது, உடலில் உள்ள பி.ஹெச் அளவையும் அதிகரிக்க உதவும்.