முட்டையின் மஞ்சள் கரு ஆபத்தானதா.? அதில் இருக்கும் நன்மைகள் என்ன.?
முட்டையின் மஞ்சள் கரு ஆபத்தானதா.? அதில் இருக்கும் நன்மைகள் என்ன.?
முட்டையின் மஞ்சள் கரு உடலுக்கு ஆரோக்கியம் ஆனதா.? இல்லையா.? என்பது நீண்ட கால விவாதம் ஆகும். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள அதிக அளவு கொலஸ்ட்ரால் அவற்றை ஆரோக்கியமற்றதாக ஆக்குகிறது என்று பலர் நம்புகிறார்கள், இது மஞ்சள் கருவை நிராகரிக்க வழிவகுக்கிறது.
இதனால், கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், சிலர் முட்டையை உணவில் சேர்க்கத் தயங்குகின்றனர்.எனினும் இந்த செய்தி முழுக்க பொய் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில் முட்டையின் மஞ்சள் கருக்கள் சிறந்த சத்தான உணவு ஆகும். இதனை நாம் தவிர்க்காமல் நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.