நோய்களைப் போக்கும் இஞ்சியின் மகத்துவமான நன்மைகள்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
நோய்களைப் போக்கும் இஞ்சியின் மகத்துவமான நன்மைகள்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
நோய்களை போக்குவதில் இஞ்சி ஒரு சமையலறை மருத்துவர் என்று அழைக்கலாம். அந்த வகையில் இஞ்சியில் அவ்வளவு மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது. எனவே, உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இஞ்சி சாற்றை பாலில் கலந்து குடித்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகும். அதேபோல் கெட்ட கொழுப்புகள் குறைந்து உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், களைப்பு மற்றும் மார்பு சளி குணமாகும். அதேபோல் எஞ்சிய சுட்டு சிறிது உப்பில் கலந்து சாப்பிட்டால் பித்தம் குணமாகும்.
இஞ்சி சாற்றில் வெள்ளம் கலந்து சாப்பிட்டால் வாத கோளாறு நீங்கும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட்டால் பித்தம், அஜீரண கோளாறு மற்றும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
10 கிராம் இஞ்சி யை பூண்டுடன் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கப் சுடுதண்ணீரில் கலந்து காலை மாலை என இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
இஞ்சி சாறுடன், தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தொப்பை கரைந்து விடும். இஞ்சி சாரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நல்ல பசி ஏற்படும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒரு வேலை முடிந்தால் சாப்பிட்டு வர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.