அவித்த வேர்க்கடலையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.!!
அவித்த வேர்க்கடலையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.!!
வேர்க்கடலை சமையலில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சிறந்த ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. வேர்க்கடலை புரோட்டின் சத்தின் மிகப்பெரிய மூலமாக இருக்கிறது. மேலும் இவற்றில் நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. வேக வைத்த வேர்க்கடலையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.
இதய ஆரோக்கியம்
வேர்க்கடலையில் நல்ல கொழுப்புகள் நிறைந்து இருக்கிறது. அவித்த வேர்க்கடலையை சாப்பிடும் போது அதில் உள்ள நல்ல கொழுப்புகள் நமது உடலுக்கு கிடைக்கிறது. மேலும் இந்த நல்ல கொழுப்புகள் கெட்ட கொலஸ்ட்ரால் நமது உடலில் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது. இதன் காரணமாக இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு இரத்த அழுத்தமும் கட்டுப்படுத்தப்படுகிறது.
எடை குறைப்பிற்கு உதவுகிறது
வேர்க்கடலையில் புரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இவை நமது உடல் கட்டுக்கோப்புடன் இருப்பதற்கு மிகவும் உதவுகிறது. நார்ச்சத்து உடலின் செரிமானத்தை மேம்படுத்துவதோடு எடை குறைப்பை துரிதப்படுத்துகிறது. அவித்த வேர்க்கடலையை சாப்பிடுவதால் அடிக்கடி பசி ஏற்படாமல் உடலானது கட்டுக்குள் இருக்கும்.
இதையும் படிங்க: வாவ்... செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் அல்சருக்கு தீர்வு.!! வெளியான புதிய ஆய்வு.!!
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது
வேர்க்கடலையில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. நார்ச்சத்து நமது உணவில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் விரைவாக கலந்து விடாமல் கட்டுக்குள் வைத்திருக்கிறது.. இதனால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதற்கு வேர்க்கடலை உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் அவித்த வேர்க்கடலையை உண்பதன் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா.? ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரை.!!