அடடே... கீமோதெரபி முதல் இதய நோய் வரை.!! இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!
அடடே... கீமோதெரபி முதல் இதய நோய் வரை.!! இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!
உலகின் பெரும்பாலான நாடுகளில் அசைவ உணவுகள் சமைக்கும் போது இஞ்சி முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இவை நம் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது. உடலின் செரிமானத்தை தூண்டுவதிலும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி சாறை வெறும் வயிற்றில் அருந்தி வருவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இஞ்சியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்
இஞ்சியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இவற்றில் குறிப்பாக சோடியம், மக்னீசியம், பாஸ்பரஸ், புரோட்டின், கார்போஹைட்ரேட் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் போன்றவை நிறைந்திருக்கிறது. இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் இஞ்சி சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
இஞ்சி சாறு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
இஞ்சி சாறை வெறும் வயிற்றில் குடித்து வருவதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் கீமோதெரபி சிகிச்சையின் போது ஏற்படும் குமட்டலை போக்குவதற்கு இஞ்சி சாறு பெரிதும் உதவுகிறது. இஞ்சிச்சாறு உடலின் இன்சுலின் அளவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: ஷாக்கிங்... கால்களில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா.? அலட்சியம் வேண்டாம்.!! மருத்துவர்கள் எச்சரிக்கை.!!
இதய ஆரோக்கியத்திற்கு உதவும் இஞ்சிச்சாறு
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் உடலின் ரத்த ஓட்டம் மேம்படுவதோடு இதயத்தின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இஞ்சிச்சாறு குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக பருவ காலங்களில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை உடலை தாக்காமல் இருப்பதற்கு தேவையான சக்தியை இஞ்சி சாறு அளிக்கிறது.
இதையும் படிங்க: மாரடைப்பிற்கும் வாய் சுகாதாரத்திற்கும் உள்ள தொடர்பு.!! மருத்துவர்கள் பகிர்ந்து அதிர்ச்சி தகவல்.!!