இதயம் ஏன் 'லப்டப்' என துடிக்கிறது?.. ஆச்சரியமூட்டும் அசத்தல் தகவல்கள்.!
இதயம் ஏன் 'லப்டப்' என துடிக்கிறது?.. ஆச்சரியமூட்டும் அசத்தல் தகவல்கள்.!
நமது உடலில் உள்ள இதயம் தொடர்ச்சியாக இயங்கும் உடல் உறுப்புகளில் முதல் இடத்தில் இருக்கிறது. இதன் சுவாரசிய தகவல் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
மனிதனின் இதயம் என்பது தசையால் ஆன உறுப்பு ஆகும். இது உடலின் வேறெந்த தசைகளை விடவும் அதிகளவு உழைக்கிறது. நம் இதயம் நிமிடத்திற்கு சராசரியாக 72 முறையும், நாளுக்கு சுமார் 1 இலட்சம் முறையும் துடிக்கிறது.
தனிமனிதனின் சராசரி வாழ்நாட்களில் அதிகபட்சமாக 350 கோடி முறைகள் இதயம் துடிக்கின்றன. இதில் மணிநேரத்திற்கு 378 லிட்டர் இரத்தம் பம்ப் செய்யப்படுகிறது. ஒரு மணிநேரத்திற்கு 1.6 கிமீ வேகத்தில் இரத்த குழாய்களுக்கு இரத்தம் இதயத்தால் அனுப்பப்படுகிறது.
மருத்துவர்கள் உபயோகம் செய்யும் இதயத்துடிப்பு கண்டறியும் கருவியான ஸ்டேதாஸ்கோப் கடந்த 1816 ஆம் வருடம் உருவாக்கப்பட்டது. கருவில் உள்ள குழந்தை 5 வாரமாக இருக்கும் போது தனிமனிதனுக்கு தொடங்கும் இதயத்துடிப்பு, அவன் இறக்கும் வரை தொடர்கிறது.
நிமிடத்திற்கு ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் சராசரியாக 8 முறைகள் அதிகம் துடிக்கின்றன. இதயம் தான் துடிப்பதற்கு தேவையான சக்தியை தானே உற்பத்தி செய்துகொள்ளும். இதனால் உடலில் இருந்து அவை அகற்றப்பட்டாலும் குறிப்பிட்ட நேரம் வரையில் துடிக்கும். இதயத்தின் 4 அறை வால்வுகள் திறந்து மூடுவதால், இதயம் துடிப்பது லப்டப் என்ற சத்தத்தில் கேட்கிறது.