அச்சச்சோ.. பயணத்தின்போது இந்த பிரச்சனைகள் இருக்கா?.. கவலைப்படாதீங்க.. அசத்தலான தீர்வு இதோ..!
அச்சச்சோ.. பயணத்தின்போது இந்த பிரச்சனைகள் இருக்கா?.. கவலைப்படாதீங்க.. அசத்தலான தீர்வு இதோ..!
டிராவலிங் என்றால் பிடிக்காத நபர்கள் யாரும் கிடையாது. ஆனால் சிலருக்கு பயணத்தின் போது வாந்தி, மயக்கம், குமட்டல், தலைசுற்றல் மற்றும் தலைவலி போன்ற உணர்வுகளும் ஏற்படும். இது பொதுவானது தான் என்றாலும் சிலருக்கு மோசமான விளைவுகளும் உருவாக்கிவிடும். இதைத்தான் இயக்க நோய் அல்லது Motion Sickness என்று கூறுகின்றனர்.
கண்கள், உடல் மற்றும் காதுகள் அனுப்பும் தகவல்களை மூளை சரியாக புரிந்து கொள்ளாத போது இப்பிரச்சனை ஏற்படுகிறது. கார், விமானம், படகு மற்றும் பூங்கா விளையாட்டுகளின் போது அதிக இயக்கங்கள் இருப்பதால் உடல்நிலை சரியில்லாத உணர்வு ஏற்படுகிறது. சிலருக்கு இதனால் வாந்தியும் வருகிறது.
உடலின் இயக்க உணர்வு பகுதிகளான காதுகள், கண்கள், தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு வெளிப்புற இயக்கத்தினால் கலவையான சிக்னல் மூளைக்கு அனுப்பப்படும் போது, மூளை தகவல்களை புரிந்துகொள்வதில் குழப்பம் அடைகிறது. இதன் காரணமாகவே பிரச்சனைகள் உண்டாகிறது.
Motion Sickness-ஐ தவிர்க்கும் சில வழிமுறைகள் குறித்து தற்போது காணலாம்.
அதிக உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் :
நீண்ட பயணம் செல்வதற்கு முன்னதாக பொரித்த, காரமான அல்லது அதிக உணவை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இது இயக்கப் பிரச்சனையை ஏற்படுத்தும்.
முன்பக்க சீட்டில் அமர வேண்டும் :
பயணிகள் முடிந்தவரையும் வாகனத்தின் முன்பகுதியில் அமர்வதாலும், வாகனத்தை நீங்களே ஓட்டி செல்வதாலும் இயக்கப்பிரச்சினைகள் வராமல் தடுக்க இயலும். ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி பயணிக்கும் போது உடல் இயக்கமும், மூளைக்கும் செல்லும் சிக்னலும் குழப்பம் அடையாது. இதனை தவிர்க்க முன்பக்க சீட்டில் அமரும்போது ஜன்னல் அளவு மற்றும் பார்வை அளவு அதிகமாக இருப்பதுடன் குழப்பங்களும் குறைவாகவே இருக்கும்.
இஞ்சி எடுத்து செல்ல வேண்டும் :
டிராவலிங் செல்லும்போது குமட்டலை கட்டுப்படுத்த இஞ்சி எடுத்துச் செல்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். துருவிய இஞ்சி அல்லது இஞ்சி மாத்திரைகளை கொண்டு செல்வதன் மூலம் தலைசுற்றல், குமட்டல் போன்றவற்றை தடுக்க இயலும்.
பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும் :
பயணம் செய்யும்போது எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பிரேக் எடுத்து வாகனத்தில் பயணிப்பது மிகவும் சிறந்தது. குறிப்பாக மலைபிரதேசங்களிலோ அல்லது நிறைய வளைவுகள் இருக்கும் பகுதிகளில் பயணிக்கும்போது, இடைவெளிவிட்டு பயணிப்பதால் மூளை இயக்க உணர்வுகளை புரிந்து கொள்ள இயலும்.