அடிசக்க... விந்தணு, ஆண்மையை அதிகரிக்கும் மன்மத உணவுகள் எவையெவை?.. ஆண்களே உங்களுக்குத்தான்.!
அடிசக்க... விந்தணு, ஆண்மையை அதிகரிக்கும் மன்மத உணவுகள் எவையெவை?.. ஆண்களே உங்களுக்குத்தான்.!
இன்றுள்ள காலகட்ட நிலையில் திருமணமான பல்வேறு தம்பதியினருக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. பலரும் இளம் வயதில் கண்ட விடீயோக்களை பார்த்து கணக்கில்லாமல் உயிரணுவை விரயம் செய்து வருகின்றனர்.
சிலர் வயது கழிந்து திருமணம் செய்கிறார்கள். இதனால் விந்தணுவின் எண்ணிக்கை, உயிர்ப்புத்தன்மை, ஆணுறுப்பு விறைப்புத்தன்மை, வீரியம் போன்றவை பாதிக்கப்படும்.
நல்ல ஆரோக்கியமான நபரின் விந்தணுவுக்கு இவை அதிமுக்கியம் ஆகும். விந்தணு அதிகரித்து வீரியம் கூடினால் வீட்டின் கட்டிலறையில் தினமும் குதூகலம் என்று தான் கூற வேண்டும். இதற்கு உதவும் குறிப்பிட்ட உணவுகளை மன்மத உணவுகள் என்றும் கூறுகிறார்கள். அவை குறித்த விரிவான தகவலை இன்று காணலாம்.
பாதாமில் இருக்கும் பைபர், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் ஆண்மையை அதிகரிக்கும். நீண்ட நேர உடலுறவுக்கு உதவி செய்யும். விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் உயரும்.
முட்டையில் இருக்கும் புரோட்டின், வைட்டமின் இ விந்தணுக்களின் எண்ணிகையை அதிகரிக்க உதவி செய்யும். விந்து நீர்த்துப்போகாமல் இருக்கவும் வைக்கிறது. இதனால் முட்டை சாப்பிட்டால் குழந்தை உருவாக வாய்ப்புகள் அதிகம்.
மாதுளை சாறினை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள ஆண்டி-ஆக்சிடன்ட் விந்துவின் சக்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள அணுக்களை தூண்டிவிட்டு, இரத்த ஓட்டத்தினை அதிகப்படுத்தி விந்தணுவின் தரத்தை உயர்த்துகிறது. இதில் வைட்டமின் சி சத்தும் உள்ளது.
கீரையில் உள்ள பி 9 சத்துக்கள், போலிக் ஆசிட் மூலமாக ஆண்மை இயற்கையான முறையில் உறுபதியாகும். நல்ல கீரைகளை அவ்வப்போது உடலில் சேர்த்து வந்தால் தம்பதிகளின் தாம்பத்திய உறவில் இன்பம் கிடைக்கும். குழந்தையின்மை பிரச்சனை சரியாகும்.
முருங்கை பூ மற்றும் கீரையை உணவில் சேர்த்து வந்தால் நலம். முருங்கை பூவினை அரைத்து பனங்கற்கண்டு மற்றும் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும். முருங்கை கீரையை பொடியாக அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.
இதனைத்தவிர்த்து வால்நட், புரோக்கோலி, தக்காளி, வாழைப்பழம், டார்க் சாக்லேட் போன்றவையும் விந்தணு மற்றும் தாம்பத்திய உணர்வை அதிகரிப்படுத்தும்.