உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சுவையான சோயா பீன்ஸ் தோசை..! இன்றே செய்து அசத்துங்கள்..!!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சுவையான சோயா பீன்ஸ் தோசை..! இன்றே செய்து அசத்துங்கள்..!!
சோயாபீன்ஸில் புரதம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இன்று முளைகட்டிய சோயா பீன்ஸில் தோசை செய்து சாப்பிடுவது குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள் :
சோயாபீன்ஸ் - 3 கிண்ணம்
கேரட் - இரண்டு
முள்ளங்கி - இரண்டு
வெங்காயம், தக்காளி - இரண்டு
அரிசி - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஐந்து
சீரகம் - சிறிதளவு
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட கேரட், முள்ளங்கி ஆகியவற்றை துருவி பின் சோயா பீன்சை வெதுவெதுப்பான நீரில் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
★தக்காளி, வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த சோயாபீன்ஸ், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
★அரைத்த மாவை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி அரிசி மாவு, துருவிய கேரட், முள்ளங்கி, வெந்தயம், சீரகம், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
★கல் சூடானதும் எண்ணெய் ஊற்றி தோசைகளாக ஊற்றி எடுத்தால் சுவையான சோயா பீன்ஸ் தோசை தயார்.