பெண்களே அசத்தல் டிப்ஸ்.. மாதவிடாய் வலியை குறைக்க பழங்கள், காய்கறிகள்.. டிப்ஸ் இதோ.!
பெண்களே அசத்தல் டிப்ஸ்.. மாதவிடாய் வலியை குறைக்க பழங்கள், காய்கறிகள்.. டிப்ஸ் இதோ.!
மாதவிடாய் நாட்கள் என்றாலே, பெண்களுக்கு மிகவும் கஷ்டமான நாட்களில் ஒன்றாகிவிட்டது. இன்றளவில் மாதவிடாய் நாட்களில் பெண்களின் வலியை உணர்ந்து, ஊதியத்துடன் விடுமுறை வழங்கும் தனியார் நிறுவனங்களின் செயலும் வரவேற்புகளை பெற்றுள்ளது.
மாதவிடாய் வலி
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் வலி மாதம் ஒவ்வொரு முறையும் தொடரும் எனினும், அதன் தாக்கம் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை பாதிக்கும். மாதவிடாய் தருணத்தில் ஏற்படும் வலியை குறைக்க மருந்துகள், வெப்பம் தரும் பட்டை போன்ற அமைப்புகள் இன்றளவில் உதவுகின்றன.
இதையும் படிங்க: இவங்க எல்லாம் கொண்டைக்கடலையை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து.! இதில் இவ்வளவு இருக்கா.?!
இந்த காலத்தில் மாதவிடாய் வலியை உணவுகள் வாயிலாகவும் குறைக்க முடியும். அதாவது நார்சத்து நிறைந்த, வைட்டமின் சி கொண்ட பழங்களை சாப்பிடுவது மாதவிடாய் வலியை குறைக்க உதவும்.
பழங்கள்-காய்கறிகள்
பழங்களில் பெர்ரி, வாழைப்பழம், தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், அத்திப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை நல்ல பலனை தரக்கூடியது. அதேபோல, ப்ரோக்கோலி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காலிப்ளவர் போன்றவையும் மாதவிடாய் வலியை குறைக்க உதவும்.
முழு அளவிலான தானியம், பீன்ஸ், நட்ஸ், விதைகள், கொழுப்பு நிறைந்த சாலமன் மீன், சூரை மீன், மாத்தி மீன், கானாங்கொத்தி போன்றவையும் நல்ல பலனை வழங்கக்கூடியவை ஆகும்.
இதையும் படிங்க: சிறுநீரக நன்மைக்காக நாம் செய்ய வேண்டியது என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!