உஷார் மக்களே.. முட்டையை இப்படி சாப்பிட்டால் ஆபத்தா?.. கொலஸ்டிராலும், இரத்த அழுத்தமும் அதிகரிக்குமாம்..!!
உஷார் மக்களே.. முட்டையை இப்படி சாப்பிட்டால் ஆபத்தா?.. கொலஸ்டிராலும், இரத்த அழுத்தமும் அதிகரிக்குமாம்..!!
முட்டையில் புரதங்கள், தாதுக்கள், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்துள்ளன. தற்போதைய காலகட்டத்தில் இளைய சமுதாயத்தினர் முட்டை பொரியல், ஆம்லெட், ஆஃபாயில் என ஏதாவது ஒன்றை காலை உணவாக எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பல ஊட்டச்சத்து நிபுணர்களும் முட்டையை காலையில் உணவாக எடுத்துக் கொள்வதையே பரிந்துரைப்பார்கள். ஏனெனில் எடை இழப்பதற்கும், பசியின்மையில் இருப்பவர்களுக்கும், இன்சுலின் பிரச்சனை உள்ளவர்கள் என அனைவருக்கும் பரிந்துரைக்கப்படும் முதல் உணவு முட்டைதான். ஆனால் முட்டைகளை சரியான முறையில் உட்கொள்கிறார்களா? என்பது தான் இங்கு மிகப்பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
ஏனெனில் ஒருவர் முட்டையை தவறான விதத்தில் உண்பதால் உடலுக்கு பலவித தீமைகளே ஏற்படுகிறது. உடலுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும்போது அதனை மன நிறைவோடு உண்ண வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் முட்டையை உண்டால் அதன் நோக்கமே தோல்வியடைந்து ஆரோக்கியத்தை தீமையாக்கிவிடும்.
முட்டைகளை பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் உண்பது எந்த வகையில் ஆரோக்கியத்தை கெடுக்கும்?
முட்டையை பேக்கான் துண்டுகள், சாசேஜஸ் போன்ற உப்பு சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்குடன் சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் அதிகமாகும். உண்மையில் இது போன்ற உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சோடியம் அளவு அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தமும் கொலஸ்ட்ராலும் அதிகரிக்கும்.
ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் கொண்ட உணவில் நிறைவுற்ற அளவு டிரான்ஸ் கொழுப்புகள் 20 கிராமுக்கு மேல்இருந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பேக்கானில் 12.6 கிராம் கலோரிகள் இருக்கிறது என்று கூறுகின்றனர்.
ஆரோக்கியமான முட்டையை அதிகம் பயன்படுத்துவது எப்படி?
சரியான உணவுடன் முட்டையை உட்கொள்வதன் மூலம் அதிகபட்ச நன்மைகளை பெற இயலும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆலிவ் ஆயிலில் சமைத்து, வெண்ணெய், பழங்கள், முழு தானியங்களுடன் டோஸ்ட் செய்தோ அல்லது வறுத்தோ காய்கறியுடன் முட்டையை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.