மாங்காயை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியா.?! குளிர வைக்கும் உணவுகள் இதோ.!
மாங்காயை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியா.?! குளிர வைக்கும் உணவுகள் இதோ.!
உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
விட்டமின் கே வெள்ளரிக்காயில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் செரிமானத்தை மேம்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது.
இதய பிரச்சினைகளை குணப்படுத்தவும், சர்க்கரையை கட்டுப்படுத்தவும் இளநீர் உதவுகிறது. இது உடலில் நீர் சத்தை அதிகரிப்பதுடன் சிறுநீரக கற்கள் வருவதை தடுத்து உடல் வெப்பநிலையை குறைக்க பயன்படுகிறது.
பப்பாளியின் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடல் கொழுப்பை குறைத்து உடல் குளிர்ச்சி அடைய உதவுகிறது.
அன்னாசி பழத்தில் நார்ச்சத்து இருக்கிறது. இது கேன்சரை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுவதுடன் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.
பொதுவாக மாங்காய் சூடு என்ற கருத்து நிலவுகிறது. இது இதயத்திற்கு நன்மை செய்யவும் பற்களை வலுவாக்கவும் உதவுகிறது. மேலும், இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய உணவாகும்.
காய்கறிகளை பச்சையாக சாப்பிடும் போது அவை உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். தர்பூசணி மற்றும் தக்காளி உள்ளிட்ட உணவுகள் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை. உணவில் இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதற்கு பதில் நாம் தேனை பயன்படுத்தினால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்த முடியும்.