ஓமத்தை கொதிக்க வைத்து குடித்தால் உடலில் நிகழும் அதிசயம்.. உடனே முயற்சியுங்கள்.!
ஓமத்தை கொதிக்க வைத்து குடித்தால் உடலில் நிகழும் அதிசயம்.. உடனே முயற்சியுங்கள்.!
ஓமத்தில் நார்ச்சத்து, நியாசின், இரும்புச்சத்து, கால்சியம், தையாமின், பாஸ்பரஸ் மற்றும் கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், ஓமம் கலந்த பானம் எவ்வாறு செய்வது என்றும், அதன் பயன்கள் என்னவென்றும் இந்த பதிவில் காண்போம்.
தேவையானப் பொருட்கள் :
ஓமம் - 1 தேக்கரண்டி
பனை வெல்லம் - தேவையான அளவு
தண்ணீர் - 2 டம்ளர்
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். பிறகு 2 டம்ளர் தண்ணீர் மற்றும் ஓமம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு, அந்த நீர் பாதியாகக் குறைந்ததும் அதில் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து வடிகட்டி இறக்கினால் ஓமம் கலந்த பானம் தயார்.
இதையும் படிங்க: உஷார்.. சிறுநீரை அடக்கி வைச்சா, இப்படி கூட நடக்குமா.?! அதிர்ச்சி தகவல்.!
ஓமம் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
பெண்கள் ஓமம் கலந்த நீரை குடிப்பதினால் சீரற்ற மாதவிடாய் பிரச்சனை குணமாகும். மேலும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிக்கு ஓமம் கலந்த நீர் ஒரு சிறந்த தீர்வாகும்.
இடுப்பு வலி பிரச்சனை உள்ளவர்கள் சிறிது தண்ணீரில் ஓமத்தை கலந்து கொதிக்க வைத்து அதோடு 100 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்பு, அதை வடிகட்டி அதில் சிறிது கற்பூரப்பொடியை கலந்து மிதமான சூட்டில் இடுப்பில் தடவி வர இடுப்பு வலி குணமாகும்.
ஓமத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகையால், அஜீரணக் கோளாறுகளால் சிரமப்படுபவர்கள் ஓமம் கலந்த நீரை குடிப்பதனால் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். மேலும், வயிறு உப்புசம் மற்றும் வயிற்று வலிக்கு ஓமம் கலந்த நீர் ஒரு சிறந்த நிவாரணி ஆகும்.
நெஞ்சு சளி அதிகம் உள்ளவர்கள் ஓமம் கலந்த நீரை குடிப்பதனால் விரைவில் சளி பிரச்சனை குணமாகும். மேலும், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குடித்தால் மூச்சுக் குழாய் அழற்சியை குணமாக்கும். அதுமட்டுமல்லாமல், தலைவலிக்கும் ஓமம் கலந்த நீர் ஒரு சிறந்த நிவாரணி ஆகும்.
இதையும் படிங்க: கேஸ் பிரச்சனையால், அவதியா.? இதை செஞ்சி பாருங்க.. எல்லா வாயுவும் உடனே வெளியேறும்.!