பச்சை மிளகாயில் இத்தனை வியாதிகளுக்கு மருந்து இருக்கா? உடனே பாருங்க!
Pachai milagai benefits and health tips
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களில் ஓன்று பச்சை மிளகாய். சிலர், ஐயோ பச்சைமிளகாய் காரமாய் இருக்கே என்று ஒதுக்குவது உண்டு. அவ்வாறு பச்சை மிளகாயை ஒதுக்கும் நபர்களுக்குத்தான் இந்த பதிவு.
செரிமானம்:
பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
இதயத்துக்கு நல்லது:
பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
அதிக இரும்பு சத்து:
பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது.
சர்க்கரை:
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
தலைமுடி:
பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது பச்சை மிளகாய்.