மக்களே உஷார்.. உருளைக்கிழங்கு அதிகம் உண்ணும் பழக்கமுடையவரா நீங்கள்?.. அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சிக்கங்க..!
மக்களே உஷார்.. உருளைக்கிழங்கு அதிகம் உண்ணும் பழக்கமுடையவரா நீங்கள்?.. அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சிக்கங்க..!
உலகளவில் அனைவருக்கும் பிடித்த உணவாக உருளைக்கிழங்கு இருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு உணவுகளை ருசியாக சமைத்து சாப்பிடுவது வழக்கம். வேக வைத்தோ, மசித்தோ அல்லது வறுத்தோ எப்படி வேண்டுமானாலும் பிற காய்கறிகள், அசைவத்துடன் சேர்த்து சமைத்து சாப்பிட உருளைக்கிழங்கு சிறந்த உணவாகும்.
ஆனால் மருத்துவர்கள் உருளைக்கிழங்கை அளவாக சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். அதிகமாக உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
இதற்கு காரணம் உருளைக்கிழங்கில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் கார்போஹைட்ரேடுகளும் அதிகளவில் இருக்கிறது என்பதே. உருளைக்கிழங்கில் உள்ள நன்மை, தீமைகளை தெரிந்து கொண்டு அளவுக்கு ஏற்றவாறு சாப்பிடலாம். அவற்றின் பக்கவிளைவுகள் குறித்து தற்போது காணலாம்.
சர்க்கரை அளவை அதிகரிக்கிறது :
உருளைக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தின் சர்க்கரை அதிகரிக்கும். அதிலும் உருளைக்கிழங்கை வறுத்து சாப்பிடும் போது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவேதான் புரதச்சத்து உணவுகளான சிக்கன், மீன், முட்டை போன்ற உணவுகளுடன் உருளைக்கிழங்கை சேர்த்து சாப்பிட வேண்டும்.
உடல் எடை அதிகரிக்கும் :
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களது டயட்டில் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்துக்கொள்வர். அதே சமயம் வறுத்த உருளைக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும். மேலும், சாஸ், மயோனைட் என சேர்த்து சாப்பிடும்போது கலோரிகள் அளவு அதிகரித்து உடல் எடை கூடும்.
நீண்ட நேரத்திற்கு பசிக்காது :
உருளைக்கிழங்கில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்டநேரம் பசி உணர்வை தூண்டாது. மேலும் இடையிடையே நொறுக்கு தீனி சாப்பிடவும் தோன்றாது. இதனால் தான் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் காலை உணவில் உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்வர்.
சரும ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் :
வறுத்த உருளைக்கிழங்கினை அதிகளவு சாப்பிடுவதால் AGEs என்று சொல்லக்கூடிய கிளைக்கேஷன் அளவை உருவாக்கும். இது சருமத்தில் படிவதால் சீக்கிரத்தில் வயதான தோற்றத்தை அளிக்கும்.