கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலி பிரச்சனையும், தீர்வும்.. விபரம் உள்ளே.!
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலி பிரச்சனையும், தீர்வும்.. விபரம் உள்ளே.!
கர்ப்பமாக இருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். கர்ப்பிணி பெண்களுக்கு மூட்டு வலி ஏற்படும் பட்சத்தில் மூட்டுகள் மற்றும் உடலின் பிற பகுதிகளிலும் அதன் வீக்கம் ஏற்படும்.
இதனால் வலி, வீக்கம், விறைப்புத்தன்மை போன்றவை ஏற்படும். மூட்டு வலி மூட்டு திசுக்களுக்கு எதிரான ஆண்டிபாடிகளை உருவாக்கும். இது கர்ப்பிணி பெண்களில் அதிகளவு காணப்படுகிறது. இவை பெண் கருவில் குறைந்த அளவில் இருக்கின்றன.
இவ்வகையான பாதிப்பு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பட்சத்தில் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, நோய் எதிர்ப்பு மண்டலம் வளராமல் தடுக்கப்படும் பிரச்சனையும் உண்டாகும். குழந்தைகளுக்கு வெளிப்படும் அறிகுறிகளை போல டைப் 1 நீரிழிவு ஏற்படும் ஆபத்தும் அதிகம்.
இக்காலத்தில் மூட்டு வலியை குறைக்க மகப்பேறு மற்றும் மூட்டு மருத்துவ நிபுணரை அணுகுவது நல்லது. சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பாதுகாப்பது இருவரின் உடல் நலத்திற்கும் நல்லது.
அதேபோல மன அழுத்தத்தையும் உடற்பயிற்சி செய்து குறைக்க வேண்டும். சமச்சீரான உணவுகளை சாப்பிடுவது, பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது, கொழுப்புகள் குறைந்த உணவுகளை சாப்பிடுவது மன அழுத்தம் இன்றி இருக்க உதவும். தியானம் செய்வதும் பயனளிக்கும்.