×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாரத்திற்கு ஒரு முறை மது அருந்தினால் கூட இந்த பாதிப்பு ஏற்படுமாம்!. அதிர்ச்சி தகவல்கள்!.

வாரத்திற்கு ஒரு முறை மது அருந்தினால் கூட இந்த பாதிப்பு ஏற்படுமாம்!. அதிர்ச்சி தகவல்கள்!.

Advertisement

 


மனித உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு.  கல்லீரல் செயல் இழந்துவிட்டால் உயிர் போகும் அபாய நிலை ஏற்படும் மனிதனின் செயல்பாட்டிற்கு கல்லீரல் முக்கியமான ஒன்று 

சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால் சரியாக அதனை கவனிக்கமாட்டோம். கல்லீரல் பாதிப்பு உணவு பழக்க வழக்கத்தினால் கூட ஏற்படலாம் 

இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிடுவது, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து  கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாம் வாரத்திற்கு ஒரு முறை தானே மது அருந்துகிறோம், என நினைப்பவர்களுக்கு கூட கல்லீரல் பாதிப்பு அவசியமாக ஏற்படும் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். 

மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும். கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில் வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும்  ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது, அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். 

கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால் தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால் அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால் அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால் தொடர்ச்சியாக இருந்தால் அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மேலும் வாய் கசப்பு ஏற்படும். கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால் கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

முக்கிய அறிகுறி வயிறு வீக்கம். கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். கல்லீரல் பிரச்சினை உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் பயம் வேண்டாம்.  

ஏனெனில், மனித உறுப்பில் கல்லீரல் மட்டும் தான் எவ்வளவு சேதமடைந்தாலும், எளிதில் குணமாகக் கூடிய ஒரு உறுப்பாகும். அதேபோல் கல்லீரலை கவனிக்காமல் விட்டால் எளிதில் உயிர் போகும் அபாய நிலை ஏற்படும்.   

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#alcohol #Kidney failure #Liver affect #health tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story