"பித்த வெடிப்பு பாடாய்ப்படுத்துகிறதா..?" இதோ உங்களுக்கான தீர்வு.!
பித்த வெடிப்பு பாடாய்ப்படுத்துகிறதா..? இதோ உங்களுக்கான தீர்வு.!
நமது உடலில் மிகக் குறைந்த கவனிப்பைப் பெறும் பாகம் நமது கால் பாதம். பித்த வெடிப்பு வரும் வரை கால்களுக்கும் கவனம் தேவை என்பதை நாம் உணர்வதில்லை. முகத்திற்கு தரும் முக்கியத்துவத்தை, நாம் பாதத்திற்கு தருவதில்லை. நம் உடலை முழுவதுமாக தாங்கும் இந்த பாதத்தை அக்கறையுடன் பராமரிப்பது அவசியம்.
உடலில் சூடு மற்றும் பித்தம் அதிகம் உள்ளவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், வேலையின் காரணமாக நீண்ட நேரம் நிற்பவர்கள், அழுக்கான பகுதிகளில் காலனி இல்லாமல் வேலை செய்பவர்கள் போன்றோர் பித்தவெடிப்பினால் அல்லளுறுகின்றனர். பாதத்தின் தோல் வறண்டு, வெடித்து, சில சமயங்களில் ரத்தமும் கசிய கூடும். வலியும் மிகுதியாக இருக்கும்.
நமது உடலில் நீர்ச்சத்து குறையும் பொழுது நமது தோல் வறண்டு விடும். இதனால் பாதத்திலும் வெடிப்புகள் உண்டாகும். குளிர்காலங்களில் இது அதிகமாக இருக்கும். தினமும் இரவில் கால்களை மிதமான சூட்டில் இருக்கும் நீரில் ஊற வைப்பது நல்லது.
நீர்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எடை அதிகம் உள்ளவர்கள் அதனைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். சர்க்கரை நோயாளிகளும் தனது பாத பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. நகங்களை வெட்டி பாதங்களை தூய்மையாக வைத்திருங்கள்.