இந்த பிரச்சனை உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிட கூடாது.! ஏன் தெரியுமா.?!
சியா விதைகளில் கூட சிக்கல் உள்ளது..! இந்த உடல் பிரச்சனை உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிட வேண்டாம்...!
சியா விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சியா விதைகளை ஊற வைத்து சாப்பிட்டால் நல்ல பலனை தரும். இதில், உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடல் கொழுப்பைக் கரைத்து உடல் பருமனை குறைக்கிறது.
திருநீற்றுப் பச்சிலை விதைகள் தான் சியா விதைகள் எனப்படுகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும், இந்த விதைகள் இனிப்பு சுவை கொண்டது. அதுமட்டுமல்லாமல் கால்சியம், ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம், மெக்னீசியம், புரதம் என பல வைட்டமின்களை கொண்டது. அதுமட்டுமல்லாமல், இதில் கலோரி அளவு மிகவும் குறைவு. இவ்வளவு, ஆரோக்கியம் நிறைந்த இந்த சியா விதைகளில் சில பக்க விளைவுகளும் உண்டு. அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில், இந்த உணவை எல்லாம் தொட்டுக் கூட பார்க்கக் கூடாது.! மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!
சியா விதைகள் யார் யார் சாப்பிட கூடாது?
சியா விதைகளை குறைந்த இரத்த அழுத்த பாதிப்புகள் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட கூடாது. இதில் உள்ள ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆகையால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் சியா விதைகளை தவிர்ப்பது நல்லது.
மேலும், இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் வாயு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி பாதிப்பு உள்ளவர்கள் சியா விதைகளை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்ல நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த விதைகளை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. மேலும், இதில் உள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரக கற்களை ஏற்படுத்த கூடும்.
சியா விதைகளை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுட்டும் பெண்கள் தவிர்ப்பது நல்லது. மேலும், சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். அதுமட்டுமல்லாமல், சிலருக்கு சியா விதைகளை சாப்பிடுவதால் ஒவ்வாமை இருக்கலாம். இதனால், தோல் அரிப்பு, வயிற்று வலி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.
சியா விதைகளை ஒரு நாளைக்கு 28 கிராம் மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும், பால் அல்லது தண்ணீரில் இரவு முழுவதும் அல்லது 10 மணி நேரம் ஊற வைத்து சாப்பிடுவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பு :
இது ஒரு வீட்டு மருத்துவக் குறிப்பு ஆகையால், சியா விதைகளை சாப்பிடும் முன் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.
இதையும் படிங்க: குளிருக்கு பயந்து இப்படி மட்டும் தூங்காதீர்கள்..! பெரும் ஆபத்தை சந்திக்கலாம்.!