ஆண்கள் குப்புற படுத்து உறங்கலமா?.. உண்மை என்ன?..!
ஆண்கள் குப்புற படுத்து உறங்கலமா?.. உண்மை என்ன?..!
உறக்கம் என்பது ஒவ்வொரு உயிருக்கும் தனிப்பட்டது, வாழ்க்கையை தொடர்ந்து நகர்த்த அத்தியாவசியமானது ஆகும். ஆனால், உறக்கத்தின் போது மனிதர்கள் பல விஷயங்களை சரியாக மேற்கொள்ள வேண்டும். அதுவே நமது உடல் நலத்திற்கு நல்லது.
பொதுவாக, உறங்குகையில் ஆண்கள் குப்புற படுத்து உறங்கலாமா? பெண்கள் குப்பற படுத்து உறங்கலாமா? என்ற கேள்விகள் நம்மிடம் இருக்கும். குப்புற படுத்து உறங்கினால் தான் தூக்கம் வருடம் என்றும் பலரும் கூறுவார்கள்.
ஆண்களோ, பெண்களோ குப்புற படுத்து உறங்கினால், அவை நமது கழுத்து மற்றும் முதுகெலும்பும்புகளில் பிரச்சனை ஏற்படுத்தும். குப்புற படுத்து உறங்குவதால் வயிற்று பாகம் மேலே தள்ளப்பட்டு, முதுகெலும்பின் வில்லை மற்றும் அதனிடையே இருக்கும் நரம்பு வளையும்.
இதனால் உடலின் சில பாகத்தில் வலிகள் ஏற்படலாம். மேலும், மூச்சு விடுவது சிரமமாகும் நிலையில், குப்புற படுத்து கழுத்தை திரும்பி மூச்சை விடுவது பின்னாளில் பக்கவிளைவை ஏற்படுத்தி, கழுத்து எலும்பு வலியை ஏற்படுத்தலாம்.