"புகை பழக்கம் இருக்கா உங்களுக்கு..?" குடும்பமே ஆபத்தில் இருக்கு .! வாங்க எப்படின்னு தெரிந்து கொள்ளலாம்.!
புகை பழக்கம் இருக்கா உங்களுக்கு..? குடும்பமே ஆபத்தில் இருக்கு .! வாங்க எப்படின்னு தெரிந்து கொள்ளலாம்.!
நீங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால்,உங்கள் குடும்பத்தினரையும், அருகில் இருப்பவர்களையும் நீங்கள் எவ்வாறு பாதிக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். புகை பிடிக்கும் நபரின் அருகே இருக்கும்போது, அவர் வெளியிடும் புகையை, புகை பிடிக்காத நபர் நுகர நேர்ந்தால், அதனை இரண்டாம் நிலை புகை எனலாம்.
புகைப்பிடிப்பவரின் அருகே இருந்தால், அந்தப் புகையிலிருந்து வெளிவரும் 7000 ரசாயனங்கள் புகை பிடிக்காதவரின் நுரையீரலையும் பாதிக்கும் என்று கண்டறிந்துள்ளனர். இந்தப் புகையை இரண்டாகப் பிரிக்கலாம் ஒன்று பக்கவாட்டுப் புகை, அந்த சிகரெட்டில் இருந்து வருவது. மற்றொன்று நேரடியாக வரும் பிரதான புகை, இது புகைப்பவர் வெளியிடுவது.
புகை உங்களுக்கு மட்டுமல்ல உங்களைச் சுற்றி இருப்பவர்களின் ஆரோக்கியத்திற்கும் பகை என்பதை கருத்தில் கொள்ளுங்கள். காற்றை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலை பாதிப்பதோடு அனைவரின் ஆயுளை குறைக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே ஒதுக்குங்கள்.