அச்சச்சோ.. நீராவி குளியலால் ஏற்படும் ஆபத்துகள் இத்தனையா?.. அறைவெப்ப நிலையே ஆயுளுக்கு கெட்டி..!
அச்சச்சோ.. நீராவி குளியலால் ஏற்படும் ஆபத்துகள் இத்தனையா?.. அறைவெப்ப நிலையே ஆயுளுக்கு கெட்டி..!
குளிர்காலம் பலருக்கும் இங்கு பெரும் சவாலான காலமாக இருக்கிறது. நமது ஊர்களில் உள்ள குளுருக்கே 4 போர்வைகளை போர்த்தி தூங்கும் பல நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இவர்கள் ஊட்டி, கொடைக்கானல், பெங்களூர், டேராடூன், லடாக் போன்ற குளிர் நிறைந்த பகுதிகளுக்கு செல்ல விரும்பும் நபர்களாக இருந்தால் அது அவர்களின் தைரியத்தின் உச்சம் என்று தான் இன்றுள்ள சூழலில் கூற வேண்டும். உடலில் ஏற்படும் குளிர்ச்சியை தடுக்க பல்வேறு முறைகள் இருந்தாலும், நீராவி குளியல் என்பது மேலை நாடுகளில் உள்ள வழக்கம் ஆகும். ஏனெனில் அங்கு இயல்பாகவே குளிர் கடுமையான அளவு இருக்கும். அதில் இருந்து தப்பிக்க நீராவி குளியலை மேற்கொள்வார்கள்.
இது, உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கவும், இளமையை தக்க வைக்கவும் உதவி செய்கிறது. இன்றுள்ள காலத்தில் மெட்ரோ நகரங்களில் கூட நீராவி குளியல் நிலையம் அதிகரித்து வருகிறது. இந்த அறைக்குள் இயல்பான வெப்பமே 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தான் இருக்கும். நீராவி புகையும் கண்களால் பார்க்கும் தருணமும் கிடைக்கும். இதனால் சில நன்மைகள் இருக்கிறது என்றாலும், பல தீமைகளும் உள்ளன. நீராவி குளியலை அதிகமுறை மேற்கொண்டால் உடலளவில் ஏற்படும் பிரச்சனை குறித்து காணலாம்.
உடல் வெப்பம் :
நீராவிக்குளியல் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். அளவுக்கு அதிகமான வெப்பம் உடலில் ஏற்படும் போது, அது இயல்பாகவே ஆரோக்கியத்தை இழக்க நேரிடும். தசைகள் பலவீனமாகும், தசை வலி ஏற்படும். வியர்வை அளவுக்கு அதிகமாக வெளியேறும். இவ்வாறான சில மாற்றம் உடலில் தோன்றினால், உடலுக்கு அசௌகரியமாக உணர்ந்தால் நீராவி குளியல் அறையை விட்டு வெளியேறுவது உயிருக்கு நல்லது.
இதய நோய் ஆபத்து :
நீராவி அறையில் இயல்பாக இருக்கும் வெப்பம் இதய துடிப்பை அதிகரிக்கும். 10 நிமிடத்திற்குள் இதயத்துடிப்பு தொடர்ந்து அதிகரித்து இருந்தால், வாஸ்குலர் செயல்பாடுகளின் தாக்கம் வெளியாகும். வழக்கத்தை விட இரத்த ஓட்டம் அதிகரித்து, இரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் இதய நோய் ஏற்படும்.
கிருமி தாக்குதல் :
நீராவி குளியல் அறையில் என்னதான் தண்ணீர் கொதித்து நீராவி சூடாக இருந்தாலும், அதனை சரியாக பராமரிக்காத பட்சத்தில் வைரஸ் போன்ற கிருமி தொற்றுகளுக்கு உள்ளாகும் வாய்ப்புகளும் அதிகம். சில வகை வைரஸ், கிருமி தொற்றுகளே தண்ணீர் கொதிக்கும் போது இறந்துவிடும். ஒவ்வொரு கிருமிக்கும் தனித்தன்மை உள்ளது என்பதை நினைவில் வைக்க வேண்டும். நமது உடலையும் முன்னதாகவே சுத்தம் செய்துகொண்டு நீராவி குளியல் மேற்கொள்வது நல்லது.
நாள்பட்ட நோய்கள் :
நீராவி குளியலை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் நாட்பட்ட நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். பைப்ரோமியால்ஜியா போன்ற நோய்கள் ஏற்படலாம். ஆஸ்துமா, தொடர் இருமல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும். சுவாச பிரச்சனை ஏற்படலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் நீராவி குளியல் மேற்கொள்வது நல்லது.
நீரிழப்பு :
உடலுக்கு தேவையான வெப்பநிலையை விட அதிகளவு வெப்பம் நீராவி குளியலில் உமிழ்ப்படுவதால், உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் நீரழிப்பு ஏற்படும். சிலருக்கு உடல் சோர்வு, தலை சுற்றுவது, உதடு உணர்வது போன்ற பாதிப்பும் ஏற்படும்.
அறைவெப்பநிலையே சிறந்தது :
அறைவெப்ப நிலை என்பது நமது வீடுகளில் உள்ள பாத்திரத்தில் உள்ள நீரின் குளிர்ச்சி தன்மை ஆகும். இயற்கையான வெப்பநிலையில் உள்ள நீரில் தினமும் குளித்து வந்தாலே உடலுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அவ்வாறு தண்ணீர் குளிர்ச்சியுடன் இருந்தால் முதலில் கால் மற்றும் கைகளில் ஊற்றி குளிரின் தன்மையை மூளைக்கு சமிக்கை செய்ய வேண்டும். பின்னர் சில நொடிகள் கழித்து தொடையளவில் நீரை ஊற்றி, பின்னர் மார்பு பகுதியில் இருந்து நீரை ஊற்றி, அதனைத்தொடர்ந்து தலையில் நீரை ஊற்ற வேண்டும். எடுத்ததும் தலையில் குளிர்ந்த நீரை ஊற்றினால் கட்டாயம் குளிரத்தான் செய்யும்.
பின் குறிப்பு : கோடைகாலத்தில் நடுவெப்பத்தில் உள்ள சூடான நீரும் அறைவெப்ப நீர் தான். ஆகையால், அதனை குளிக்கலாமே? என்று கேள்வி எழுப்பினால், உங்களின் உடல் புண்ணாகாமல் இருந்தால் அதனை மேற்கொள்ளுங்கள் என்பதே எதார்த்தமான பதிலாக இருக்கும்.