தீப்புண், கிருமிகளை அழிக்கும் கரும்பு.. தெரிஞ்சுக்கோங்க.. ஆச்சரியப்பட்டு போவீங்க.!
தீப்புண், கிருமிகளை அழிக்கும் கரும்பு.. தெரிஞ்சுக்கோங்க.. ஆச்சரியப்பட்டு போவீங்க.!
பொதுவாக ஜனவரி மாதங்களில் பொங்கல் பண்டிகையின் போது கரும்புகளை சுவைத்து சாப்பிடுவோம். உலகளவில் கரும்புகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக கியூபா உள்ளது.
தமிழகத்தில் உழவுக்கு முதல் தலையாக இருக்கும் கதிரவனுக்கும், நிலத்தை உழும் நாட்டிற்கும், சோறு போடும் விவசாயிக்கும் நன்றி செலுத்தி பண்டிகை கொண்டாடப்படும். இன்று கரும்பில் உள்ள நன்மைகள் குறித்து காணலாம்.
கரும்பு உடலை குளிர்ச்சியாக்கும், சிறந்த மலமிளக்கியாக செயல்படும். சிறுநீரகத்தை பெருக்கும். உடலில் ஏற்படும் பித்தத்தை குறைக்கும். சிறுநீர் கடுப்பு, குடல் புண், மூலம், வெட்டை சூடு போன்றவற்றை குணப்படுத்தும்.
அதனைப்போல, புண்களை ஆற்றி, நல்ல கிருமி நாசினியாக செயல்படும். கரும்பு சாறோடு இஞ்சி கலந்து குடித்தால் வலிப்பு பிரச்சனை சரியாகும். வெல்லம், நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும்.
கரும்பு சாறுடன் வெல்லத்தோடு மஞ்சள் தூளினை சேர்த்து குழைத்து தீப்புண் மேலே தடவினால் தீப்புண் குணமாகும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் பித்தம் குறையும்.
கருப்புச் சாற்றுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க மலச்சிக்கல் பிரச்சனை தீரும். தினமும் கரும்பு சாறினை குடிக்காமல், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் வைத்தால் நலம்.