வாத பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் பேரிக்காய்; மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!
வாத பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் பேரிக்காய்; மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!

மழைக்காலங்களில் அதிகம் கிடைக்கும் பேரிக்காயில் பொட்டாசியம், பெக்டின், டானின் சத்துக்கள் இருக்கின்றன. இது உடலில் அதிகளவு இருக்கும் யூரிக் அமிலத்தை கரைக்கும் தன்மை கொண்டது. இதனால் வாதம் சார்ந்த நோய்கள் பேரிக்காய் சாப்பிட்டு வர கட்டுப்படும்.
பசி கட்டுப்படும்
நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் பேரிக்காயில், 6 கிராம் அளவில் நார்சத்து இருக்கிறது. இதனால் பேரிக்காய் சாப்பிட்டதும் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு, பசி கட்டுப்படுத்தப்படும். உடல் எடையை குறைப்போர் பேரிக்காயையும் தேர்வு செய்யலாம்.
இதையும் படிங்க: பெற்றோர்களே கவனம்.. அறிவை மங்க வைக்கும் தொலைக்காட்சி?.. குழந்தைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்..!!
குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்
பேரிக்காயில் இருக்கும் அதிக நீர், குறைந்த கலோரியை கொண்டு இருப்பதால், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவி செய்கிறது. மேலும், செரிமான விஷயத்திற்கும் உதவி செய்து, மலச்சிக்கலை எதிர்த்து போராடுகிறது. குடல் ஆரோக்கியத்தையும் பேரிக்காய் பாதுகாக்கும்.
இதையும் படிங்க: பச்சை நிற ஆப்பிள் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாமா?.. விபரம் உள்ளே.!!