கரும்பு சாறை இவர்கள் சாப்பிட்டால் அவ்வளவு தான்.. நினைத்து கூட பார்க்க வேண்டாம்.!
கரும்பு சாறை இவர்கள் சாப்பிட்டால் அவ்வளவு தான்.. நினைத்து கூட பார்க்க வேண்டாம்.!
கரும்பு சாறில் நிறைய நன்மைகள் கொட்டி கிடைக்கின்றன. இருப்பினும், சில ஆரோக்கியப் பிரச்சினைகளும், நோய்களும் இருப்பவர்கள் இந்த கரும்புசாறை பருக கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கோடையில் கரும்பு சாறு
கோடை காலத்தில் பலரும் அதிகப்படியாக கரும்பு சாறுகளை குடித்து வருகின்றனர். இதில் மினரல்ஸ், கார்போஹைட்ரேட், இரும்பு சத்து, புரதச்சத்து, பொட்டாசியம், சிங் மற்றும் விட்டமின்கள் போன்ற அதிகப்படியான நியூட்ரிஷியன்ஸ் இருக்கின்றன.
இதையும் படிங்க: கோடையில் அடிக்கடி கீரைகளை சாப்ப்பிடுவதால் என்னாகும் தெரியுமா.?!
சர்க்கரை நோயாளிகள்
இப்படிப்பட்ட சத்துக்கள் நிறைந்த கரும்பு சாறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தொட்டுக் கூட பார்க்க கூடாது. அது போல சொத்தை பல் இருப்பவர்களும், கரும்பு சாறை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். உடல் எடை அதிகம் இருப்பவர்கள் கரும்பு சாறு சாப்பிடக்கூடாது.
இதில் உள்ள சர்க்கரை மற்றும் அதிகப்படியான கலோரி உங்கள் உடலில் எதிர்மறையான பிரச்சனைகளையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
வயிறு பிரச்சனைகள்
மேலும் அடிக்கடி, வாந்தி போன்ற செரிமான பிரச்சனை இருப்பவர்கள் இதை குடித்தால் அவர்களுக்கு தலைசுற்றல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே மேற் சொன்ன பிரச்சனைகளை கொண்ட நபர்கள் கரும்பு சாரை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.
இதையும் படிங்க: கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? விபரம் இதோ.!