இவர்கள் எல்லாம் வெந்தயத்தை சாப்பிட்டால் அவ்வளவு தான்.! உஷார்.!
இவர்கள் எல்லாம் வெந்தயத்தை சாப்பிட்டால் அவ்வளவு தான்.! உஷார்.!
வெந்தயத்தின் நன்மைகள்
முடி உதிர்தல், மலச்சிக்கல், பசியின்மை, நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது வெந்தயம். இரவு முழுதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அதை மறுநாள் குடித்து வந்தால் வளர்ச்சிதை மாற்றத்தை இது விரிவுபடுத்தும். கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைக்கும். கோடை காலத்தில் வெந்தய நீர் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வாயு பிரச்சனைகளை சரி செய்யும். உடல் உஷ்ணத்தையும் குறைக்கும்.
ஒவ்வாமை
இவ்வளவு நன்மைகள் நிறைந்த இந்த நீரை சிலர் குடிக்கக்கூடாது. ஏனென்றால், வெந்தயத்தில் மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ், தாமிரம், விட்டமின் பி6 மற்றும் மாங்கனிசு உள்ளிட்ட விட்டமின்கள் இருக்கின்றன. இது ஒரு சிலருக்கு ஒவ்வாமையை கொடுக்கக்கூடும். வெந்தய நீர் குடிக்கும் போது அரிப்பு, வீக்கம் தோலில் வெடிப்பு மற்றும் கை கால்களில் சிவக்குதல் போன்றவை ஒவ்வாமையின் அறிகுறிகள்.
இதையும் படிங்க: 10 கிலோ வரை எடை குறைய உதவும் நீர்.. எப்படி பயன்படுத்துவது.?!
டயாபடிக்
இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் வெந்தய நீரை குடிக்கக் கூடாது. மேலும், சுவாச பிரச்சனை இருப்பவர்களும் வெந்தய நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவர்கள் வெந்தய நீரை குடித்தால் அஜீரண கோளாறு ஏற்படும். புளிப்பு ஏப்பம், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை வெந்தய நீரை குடித்த பின் ஏற்பட்டால் அதை உடனடியாக நிறுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகள் அதிகப்படியாக வெந்தய நீரை எடுத்துக் கொள்வதால், அவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு வேகமாக குறையும்.
கர்ப்பிணிகள்
ஆனால் அளவுக்கு அதிகமாக வெந்தய நீரை எடுத்துக் கொள்வதால் திடீரென ரத்த சர்க்கரை அளவு குறைந்து அவர்களுக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்படலாம். கர்ப்பிணிகள் வெந்தய நீரை குடிக்க கூடாது. இதனால், அவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் ஆபத்துள்ளது. வெந்தய நீர் மட்டுமல்ல. வெந்தயத்தை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளையும் அவர்கள் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
இதையும் படிங்க: தேங்காய் எண்ணெய் கொண்டு டெங்குவை விரட்டலாமா.? சித்த மருத்துவம் சொல்வதென்ன.?!