சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்காலத்தில் இதை செய்யுங்கள்.. பலன் நிச்சயம்.!
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு தடுப்பது?! இதோ உடனடி தீர்வு..!
சைனஸ் தொற்று தும்மல், சளி, கண்களில் அரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் இந்த குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை :
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும். குறிப்பாக நீரை சூடேற்றி வெதுவெதுப்பாக குடிப்பது மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல், குளிர்ந்த நீரில் குளிப்பதை விட வெதுவெதுப்பான நீரில் குளிப்பது சளி பிரச்சனை வராமல் தடுக்கும்.
இதையும் படிங்க: குளிருக்கு பயந்து இப்படி மட்டும் தூங்காதீர்கள்..! பெரும் ஆபத்தை சந்திக்கலாம்.!
சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு தூக்கம் மிகவும் அவசியம். ஆகையால், இரவு நன்றாக தூங்க வேண்டும். மேலும், வீட்டை எப்பொழுதும் காற்றோட்டாமாக வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வீட்டில் தூசி இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அதோடு, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஆவி பிடிப்பது மிகவும் நல்லது. இதனால் சளி பிரச்சனை படிப்படியாக குறையும். மேலும், ஆவி பிடிக்கும்போது அதிகம் சிரமம் படாமல் நிதானமாக செய்ய வேண்டும்.
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் சளி சரியாகி சைனஸ் பிரச்சனையை குறைக்கும். ஒரு நாளைக்கு ஒரு சிறிய துண்டு இஞ்சி எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி தேன் சாப்பிடுவது சைனஸ் பிரச்சனையை கட்டுப்படுத்தும்.
இதையும் படிங்க: சிறுநீரக நன்மைக்காக நாம் செய்ய வேண்டியது என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!