வறண்ட கருமையான உதடுகளை மென்மையாகவும் சிவப்பாகவும் மாற்ற; இயற்கையான வழிமுறைகள்...!!
வறண்ட கருமையான உதடுகளை மென்மையாகவும் சிவப்பாகவும் மாற்ற; இயற்கையான வழிமுறைகள்...!!
சிலருக்கு இயற்கையாகவே உதடுகள் நல்ல நிறமுடன் அமைந்திருக்கும். சில பேருக்கு உதடுகள் கருமையாக காணப்படும் அதற்கு பலவகையான காரணங்கள் உண்டு.
உதடுகளில் ஈரப்பதம் குறைவாக இருப்பது, வறண்ட உதடு போன்றவை கருமைக்கு முக்கிய காரணமாக உள்ளது. சில உடல்நல பாதிப்புகளாலும் உதடுகள் கருமை நிறத்தை பெறுகின்றன.
இந்நிலையில் உதடுகளை இயற்கை முறையில் சிவப்பாக வைத்து கொள்ளலாம். அவற்றுக்கான செய்முறைகளை தற்போது காணலாம்.
கற்றாழையை எடுத்து உதடுகளில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். அதன் பிறகு உதடுகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளை விதைகளுடன், 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் ப்ரஷ் க்ரீம் அனைத்தையும் ஒன்றாக கலந்து உதடுகளில் நன்றாக மசாஜ் செய்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வாந்தால் உதடுகள் நிறம் மாறும்.
பாதாம் பருப்பு பொடி மற்றும் பால் க்ரீம் இரண்டையும் கலந்து உதடுகளில் தடவி வரலாம். பாதாம் எண்ணெய்யை தினமும் உதடுகளில் தடவி வர சருமத்தை ஈரப்பதமாக்கும்.