×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலை வளர்க்க, காதல் உணர்வை தூண்டும் உணவுகள் எவை?..!

காதலை வளர்க்க, காதல் உணர்வை தூண்டும் உணவுகள் எவை?..!

Advertisement

இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் காதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் காதலை நாம் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். அதனைப்போலத்தான் ஒவ்வொரு உயிரினத்திற்கும். அதன் அன்பையும், காதலையும் நாம் விரைவில் பார்க்க வேண்டிய காலமும் வரும். 

இயற்கையாக உடலில் ஏற்படும் பசி, தாகம் போல காதல் உணர்வும் ஏற்படுகிறது. ஒவ்வொரு உயிர்களின் இலக்குகளும் காதலை சுற்றித்தான் நகர்ந்துகொண்டு இருக்கும். காதல் தொடர்ந்து இனிமையாக இருக்க உடலுக்கு, மனதுக்கும் சக்திதரும் ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. காதல் உணர்வுகளை தூண்டும் உணவுகளும் உள்ளன. அவை குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம். 

தக்காளி : 

தக்காளி காதல் உணர்வையும், பாலுணர்வையும் தூண்டும். இதற்கு "லவ் ஆப்பிள்" என்ற மற்றொரு பெயரும் உண்டு. 

கீவிப்பழம் : 

கீவிப்பழத்தில் போலேட் சத்துக்கள் அதிகளவு உள்ளன. குழந்தைப்பேறு திட்டமிட்டுள்ள பெண்கள் இதனை அவசியம் சாப்பிட வேண்டும். இது உடலுக்கு சக்தியை வழங்கும். குழந்தை ஆரோக்யத்துடன் பிறக்க உதவி செய்யும். 

லெட்யூஸ் : 

லெட்யூஸ் என்பது பார்ப்பதற்கு முட்டைகோஸ் போல தோற்றம் கொண்ட கீரை வகையாகும். இதில் பலவகையான வைட்டமின்கள் உள்ளன. இந்த லெட்யூஸ் கீரையின் சாறு நரம்புகளை அமைதிப்படுத்தும். பதற்றம் மற்றும் பயம், கவலை போன்றவற்றை நீக்கி, உடலில் நல்ல உணர்வை ஏற்படுத்தும். காதல் உணர்வை தூண்டும். 

பட்டாணி : 

பட்டாணியை "மூட் ஸ்விங்" என்று கூறுவார்கள். இது மன ஊசலாட்டத்தினை கட்டுக்குள் வைக்கும். இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் மனசோர்வு தன்மையை கட்டுப்படுத்தும். காதல் உணர்வை அதிகரிக்கும். 

மாதுளை : 

மாதுளைப்பழத்தை பழமாக அல்லது ஜூஸாக குடிக்கலாம். இது ஆண்களின் உடலுக்கு வலுவை சேர்க்கிறது. காதலுக்கு மட்டுமல்லாது, இல்லற வாழ்க்கைக்கும் உதவி சேகரித்து. 

இதனைப்போல, டார்க் சாக்லேட், காபி, தர்பூசணி மற்றும் ஆப்பிள் போன்றவையும் காதல் உணர்வை தூண்டவல்லது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tips #love tips #health tips #Health and Wealth
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story