×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடலுக்கு பல்வேறு நன்மைதரும் விளாம்பழம்.. அட்டகாசமான பலன்களை இப்பவே தெரிஞ்சுக்கோங்க..!

உடலுக்கு பல்வேறு நன்மைதரும் விளாம்பழம்.. அட்டகாசமான பலன்களை இப்பவே தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

 

விளாம்பழத்தின் மேல் புற ஓடு, விளாம்பழ மரத்தின் வேர், பட்டை, இலை போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டது. அதன் அட்டகாசமான நன்மைகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.

ஆண்டின் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும் பழங்களில் விளாம்பழத்திற்கு முக்கிய இடம் உண்டு.  விலாம்பழத்தின் காய், பழம், பட்டை. இலை போன்றவற்றை பயன்படுத்தி தேநீர் பருகலாம். காயை தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். பனங்கற்கண்டு சேர்த்தும் சாப்பிடலாம். 

கடினமான தோல் பகுதியை கொண்ட விளாம்பழத்தின் ஓட்டை உடைத்து, உள்ளிருக்கும் சதை பகுதியை நமக்கு பிடித்தவாறு பனங்கற்கண்டோ, வெல்லமோ சேர்த்து சாப்பிட வேண்டும். இது ஆயிலை நீட்டிக்கும் தன்மை கொண்டது. சிறுவர்களுக்கு தினமும் விளாம்பழம் கொடுத்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தியும் மேம்படும். 

பசியை தூண்டி ஜீரண கோளாறுகளை சரி செய்யும். நமது உடல் ரத்தத்தை விருத்தி ஆக்குவதோடு, இதயத்தை பலம் பெறவும் செய்கிறது. விளாம்பழத்தினை அரைத்து முகத்தில் பூசினால், வெயில் காலத்தில் முகத்தில் இழந்த பொலிவானது மீண்டும் பெறப்படும். வைட்டமின் சி, ஏ, புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து போன்ற பல சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. 

விளாம்பழம் மட்டுமல்லாது அதன் மேல் புற ஓடு விளாம்பழ மரத்தின் வேர், பட்டை, இலை போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டது. இந்த விளாம்பழ விதையில் உடலுக்கு நன்மை தரும் அமிலங்களும் உள்ளன. இலையில் வேதிப்பொருட்களும் இருக்கின்றன. பல மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. விளங்காயில் உயிர்சத்து நிறைந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wood apple #VIlampalam #health tips #விளாம்பழம் #ஆரோக்கியம் #உடல்நலம் #மருத்துவ குறிப்புக்கள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story