வறண்ட சேதமடைந்த சருமம் உள்ளவர்களா நீங்கள் இனி கவலை வேண்டாம் !அதற்கான தீர்வு இதோ!
vitamin-C defficency
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளில் வைட்டமின் சி சத்து மிகவும் முக்கியம். அவை போதுமான அளவு இல்லாமல் இருக்கும்போது உடலில் சில அறிகுறிகள் தோன்றி அவற்றை நமக்கு உணர்த்துகிறது. அந்த அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை இப்போது அறிந்து கொள்வோம். குறைவான அளவு வைட்டமின் சி எடுத்துக் கொள்வதால், காயம் குணமாக வழக்கத்தை விட அதிக நாட்கள் ஆகும். தொற்று மற்றும் இதர நோய்கள் எளிதில் உங்களை நோக்கி வரும் அளவிற்கு உங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும்.
வறண்ட சேதமடைந்த சருமம்:
ஒரு ஆரோக்கியமான சருமத்திற்கு வைட்டமின் சி சத்து மிகவும் இன்றியமையாதது. சந்தையில் விற்கப்படும் பல சரும பராமரிப்புப் பொருட்களில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சேர்த்து தயாரிக்கப்படுவதை நாம் கண்டிருக்கலாம். காரணம் இவற்றில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகம். இந்த சத்து சூரிய ஒளியால் சருமத்திற்கு உண்டாகும் சேதங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள்:
எலுமிச்சை, ஆரஞ்சு, பப்ளிமாசு, கிவி, அன்னாசிப்பழம், ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, பசலைக் கீரை, ப்ரோகோலி, பப்பாளி போன்றவை வைட்டமின் சி சத்தின் சிறந்த ஆதாரமாக விளங்கும் சில உணவு வகைகளாகும்