உங்களின் சிறுநீரின் நிறம் இப்படி உள்ளதா? அப்போ உங்களுக்கு அந்த பிரச்னை தான்!.
what a reason for urine color change
நாகரிகம் வளந்துவருவற்கு ஏற்ப நாம் உண்ணும் உணவு முறைகளும் மாறி வருகின்றன. இன்றைய கால கட்டத்தில் நாம் உண்ணும் உணவு முறைகள் கண்டிப்பாக உடல் ரீதியாக பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நம் உடலில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும், முதலில் மாற்றம் ஏற்படுவது சிறுநீரில் தான். மருத்துவர்கள் கூட சிறுநீர் சோதனையைத்தான் முதலில் எடுக்கச்சொல்வார்கள்.
சிறுநீரின் நிறத்தை வைத்தே நமது உடலில் ஏதேனும் பிரட்சனை இருக்கிறதா என்று கண்டுபிடித்து விடலாம். இதனாலதான் அணைத்து மருத்துவமனைகளிலும் முதலில் சிறுநீர் சோதனை செய்ய சொல்கின்றனர்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நாட்டு மருத்துவம் கொடுக்கும் நபர்கள் கூட முதலில், பாதிக்கப் பட்டவர் வெளியேற்றும் சிறுநீர் நிறம் என்ன வென்று தான் சோதிப்பார்கள்.
சிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது அடர் சிவப்பு நிறமாகவோ இருந்தால் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது மிகவும் நல்லது.
நீங்கள் சிறுநீர் கழிக்கும் பொது நுரை போன்று தோன்றினால் , நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி என்று அர்த்தம். உங்கள் சிறு நீர் பழுப்பு நிறமாக தோன்றினால் உங்களுக்கு கல்லீரலில் தோற்று ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
இதுபோன்று சிறுநீரில் நிற மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமானது.