ஜிம்மில் மங்குமாங்குன்னு ஒர்க்கவுட் பண்றீங்களா?.. திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்..!
ஜிம்மில் மங்குமாங்குன்னு ஒர்க்கவுட் பண்றீங்களா?.. திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்..!
முக்கிய பிரமுகர்களாக இருக்கும் பலரும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களிடையே திடீரென ஏற்படும் மாரடைப்பானது அவர்களின் உயிரைப் பறித்து விடுகிறது. இதனை தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பயிற்சி மேற்கொள்ளும் விபரங்கள் குறித்து அறிவது இன்று கட்டாயமாகியுள்ளது.
என்னதான் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடலை கட்டுக்கோப்புடன் வைத்தாலும், உடல்நல பரிசோதனை என்பது அனைவருக்கும் இன்றளவில் அவசியமாகிறது. உடற்பயிற்சி கூடத்தில் சேர்வதற்கு முன்பு அல்லது கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன்னர் அதற்கான பரிசோதனைகளை செய்து விட வேண்டும். இதனை செய்தபின்தான் பயிற்சியில் இறங்க வேண்டும்.
உடற்பயிற்சி என்பது உங்களுக்காக இருக்க வேண்டும். மனதை இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டும். இதைதவிர்த்து உடலை ஒரே வாரத்தில் கட்டுக்கோப்புடன் மாற்ற வேண்டும் என அதீத பயிற்சிகூடாது. இது எதிர்பாராத பின்விளைவு ஏற்படுத்தும். அதனைப் போல காற்றோட்ட வசதி கொண்ட இடங்களில் உடற்பயிற்சியை செய்வது நல்லது. ஆல்கஹாலும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஆல்கஹால் உட்கொடையால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். அதீத உடற்பயிற்சி திடீர் மாரடைப்பை தூண்டக்கூடியது. ஏற்கனவே இதயபிரச்சினை இருப்பவர்கள் உடலுக்கு அழுத்தம் கொடுப்பதால், அது பல பிரச்சினைகளுக்கும் வழிசெய்கிறது. உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது இதயத்தில் கணம், தலை சுற்றுவது, தாடையில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அதனை கண்டுகொள்ளாமல் இருக்காமல், மருத்துவரை அணுகவேண்டும்.
அப்படி ஏதேனும் ஒரு சில பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக உடற்பயிற்சி நிறுத்திவிட்டு, சிறிது ஓய்வு எடுத்து பின்னர் நிலைமையை சுதாரித்துக்கொள்ளலாம். அதிக பயிற்சியும் மிகவும் ஆபத்தானதாகும். வாரத்திற்கு 300 நிமிடம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதும் கூட. புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொண்டு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.