"முடி கொட்டுதுன்னு கவலையா இருக்கா.?.." அடர்த்தியான கருமை நிற கூந்தலைப் பெற இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!
முடி கொட்டுதுன்னு கவலையா இருக்கா.?.. அடர்த்தியான கருமை நிற கூந்தலைப் பெற இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!
சுருள் சுருளான, ஆரோக்கியமான கேசம் யார் தான் வேண்டாம் என்பார்கள்? இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இருக்கும் பிரச்சனை தலைமுடி உதிர்வது தான். உணவு பழக்கங்களையும், வாழ்வியல் முறை மாற்றங்களால் முடி உதிர்வதை கட்டுப்படுத்த முடியும்.
வாரத்தில் மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அகலமான பல்வரிசை உள்ள சீப்புகளை பயன்படுத்துவது கேசத்துக்கு நல்லது. ஹேர் டிரையரின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுவது உகந்தது. ஷவருக்கு அடியில் நின்று அதிக நேரம் குளிப்பதால், முடி உதிரக்கூடும்.