வள்ளலார் கூறிய காயகல்ப அருமருந்து தூதுவளை அனைவரும் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்..!
வள்ளலார் கூறிய காயகல்ப அருமருந்து தூதுவளை அனைவரும் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்..!
சித்த மருத்துவத்தில் தூதுவளை காயகல்பமாக, மிக சிறந்த மூலிகை தன்மை கொண்ட கீரையாக தூதுவளை விளங்குகிறது.
சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரைகளின் பட்டியலில் தூதுவளைக் முதலிடம் பிடிக்கும். தூதுவளை கீரையில் இலைகள், தண்டு, காய், இதன் பூக்கள் வரை எல்லாமே மருத்துவ குணங்களைக் கொண்டவையே.
தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.
பத்து முதல் பதினைந்து தூதுவளை இலைகளை நறுக்கி வைத்துக்கொண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெய்யில் வதக்கி, சிறுநெல்லிக்காய் அளவு இருவேளை சாப்பிட மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். தூதுவளையோடு, தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு சேர்த்து செய்யப்படும் தூதுவளைத் துவையல் குளிர்காலங்களில் சாப்பிட்டால் கபம் குறையும்.
ஜுரம், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவார்கள் தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல், ஜுரம், காய்ச்சல், குணமாகும்.