இன்னும் தூங்காம தான் இருக்கீங்களா.?! இது உங்களுக்கு தான்.!
இன்னும் தூங்காம தான் இருக்கீங்களா.?! இது உங்களுக்கு தான்.!
தூக்கம் என்பது நமக்கு மிகவும் அவசியம். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரி 8 மணி நேரமாவது நிம்மதியாக உறங்க வேண்டும். அப்போது, தான் அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்து புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய முடியும். ஆகையால், முடிந்தவரை நன்றாக தூங்க முயற்சி செய்யுங்கள்.
இரவு தூங்காமல் அதிக நேரம் விழித்திருந்தால் ஏற்படும் தீமைகள்
இரவு தூங்காமல் அதிக நேரம் விழித்திருந்தால் மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு அதிகரிக்கும். மேலும், கண் பார்வை திறன் குறையும். சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது செரிமானக் கோளாறுகளை ஏற்ப்படுத்தும். அதோடு,மூளை செயல்பாடுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். இது, மனநிலை மாற்றங்கள் ஏற்பட்டு மன அமைதியைக் கெடுக்கும்.
இதையும் படிங்க: இரவு நேரத்தில் தலை குளிப்பவரா நீங்கள்.?! இது உங்களுக்கு தான்.. இவ்வளவு ஆபத்தா.?!
இரவு விரைவில் தூக்கம் வர செய்ய வேண்டியவை
மன அழுத்தத்தை குறைத்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும், உடல் உழைப்பைக் குறைத்து தூங்கும் அறையை அமைதியாக வைய்யுங்கள். இவ்வாறு, செய்தும் தூக்கம் வரவில்லை என்றால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள்.
அமைதியாக தூங்க உதவும் சில உணவுகள்
இரவு அமைதியாக தூங்க பால், தேங்காய் பால், தயிர், கேரட் ஜூஸ் மற்றும் மொசாரெல்லா ஜூஸ் ஆகியவற்றில் எதாவது ஒன்று தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு எடுத்துக் கொண்டால் நன்றாக தூக்கம் வரும்.
தூக்கம் வராமல் இருக்கும் போது நாம் தவிர்க்க வேண்டிய உணவு
இரவு தூங்க போகும் 3 மணி நேரத்திற்கு முன்பு காபி, அல்கஹால், சாக்லேட் மற்றும் அசைவம் சாப்பிடுவது உங்கள் அமைதியான தூக்கத்தைக் கெடுக்கும். ஆகையால், இரவு நேரங்களில் இந்த மாதிரியான உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.
இதையும் படிங்க: இரவு நேரத்தில் உள்ளாடையுடன் உறக்கம்... நல்லதா? கெட்டதா?..!