×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிபிஎஸ்இ மாணவர்களும் கட்டாயத் தேர்ச்சி! மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு!

1 to 8'th cbsce students all pass

Advertisement

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளநிலையில், தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sbsce #school #result
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story